திசைகளும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்!
நண்பர்களே நேற்று எனது பிறந்த பிறந்த நாளின்போது, காலையிலேயே திசைகள் வாட்ஸ்அப் குழுவில் மணல்மேல்குடி திருமதி. சிவயோகம் மேடம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.
அதனை தொடர்ந்து பல்வேறு நண்பர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டு இருந்தார்கள். காலையிலேயே முதலாவதாக காரைக்குடி நடையாளர் கழகத்தின் மூத்த உறுப்பினர் திரு.காதர் ( ஓய்வு பெற்ற CSSR ) அலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.அவர்களுக்கும் நன்றிகள் பல.
திசைகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை அவர்கள் காலையிலேயே எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்ததுடன் அறந்தாங்கி வர இயலுமா என்று கேட்டார்கள்.
நானும் சரி என்று தெரிவித்தேன் . மாலையில் 4 முதல் 5 மணிக்குள் வருமாறு கூறினார்கள்.
அதனை ஏற்று அறந்தாங்கிக்கு மாலை 4 40 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். திசைகள் பொருளாளர் தோழர்கள் முபாரக், அண்ணாதுரை, கிரீன் பார்க் முபாரக் அலி சார், சிவா, தாஜுதீன் , ராவுத்தர் கனி , ஆசிரியர் சுரேஷ் ஆகிய நண்பர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
புத்தகப் பரிசுகளும் வழங்கி கௌரவித்தார்கள். திருமதி சிவயோகம் மேடம், யோகானந்தி தோழர், காசி விசுவநாதன் என பலரும் தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
தோழர் யோகனந்தி அவர்கள் பரிசாக பேனா வழங்கியதாக திரு.அண்ணாதுரை அவர்கள் என்னிடம் வழங்கினார்.இந்த நேரத்தில் நன்றிகள் பல.
சுட் செவி வழியாகவும், முக நூல் வழியாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த திசைகள் குழுவின் அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள் பல. காரைக்குடி நடையாளர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களும் எனக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தற்கு நன்றிகள் பல.
அனைத்திற்கும் மேலாக ஆசிரியப் பணி பற்றியும், அதில் எங்கள் பள்ளியின் செயல்பாடு பற்றியும் அருமையாக பாராட்டி குறிப்பிட்ட திசைகளின் தலைவர் மருத்துவர் தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கும் இத்தருணத்தில் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே.
அனைவருக்கும் இலவச கல்வி என்ற இலக்கை நோக்கித்தான் நமது பயணம் சென்று கொண்டே இருக்கின்றது. அனைவரின் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பல்வேறு பணிகளுக்கு இடையே அறந்தாங்கியில் என்னை வாழ்த்துவதற்காக நேரில் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அறந்தாங்கியில் நடைபெற்ற திசைகள் நண்பர்களின் சந்திப்பாகவும், எனது பிறந்த நாள் பாராட்டாகவும் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்ற க்ரீன் பார்க் முபாரக் அலி சார் அவர்களுக்கும், தாஜுதீன், சுரேஷ் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.
கடந்த வருடம் அறந்தாங்கி வர இயலாத சூழ்நிலையில் காரைக்குடிக்கே வந்து வாழ்த்தி சென்ற திசைகளின் தலைவர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
பல்வேறு பணிகளுக்கு இடையில் இந்த நிகழ்வுக்கு நல்ல முறையில் ஏற்பாடு செய்த தோழர்கள் அண்ணாதுரை அவர்களுக்கும், முபாரக் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தோழமையுடன்
லெ .சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment