Friday 3 November 2023

 நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் 

வருமான வரி துறை அதிகாரி பேச்சு 

படிக்கப் புத்தகம்  கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி 

 







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை வருமான வரித்துறை அதிகாரி வழங்கினார்.

                                  பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகம் படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு புத்தகங்களை  பரிசாக வழங்கி பேசுகையில், வருமான வரித்துறை என்பது அரசாங்கத்தின் முக்கியமான பணிகளை செய்வதற்கான துறையாகும்.மாதம் சுமார் 22 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்க கூடியவர்கள் வருமான வரி செலுத்தும் பிரிவின் கீழ் வருவார்கள். வாழ்க்கையில் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து நல்ல குடிமக்களாக உருவாகி வருமான வரி செலுத்தும் அளவிற்கு உங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான்  வாழ்க்கை நல்ல முறையில் அமையும்.

                           அரசின் பல்வேறு பணிகளுக்கும், தொழில்களை கற்றுக்கொண்டு தொழிலதிபர்களாக மாறுவதற்கும்  புத்தகங்கள்தான் உங்களுக்கு உதவியாக இருக்கும். எனவே அனைவரும்  நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முயற்சி எடுங்கள். வெற்றி நிச்சயம். என்று கூறினார்.பள்ளி மாணவர்களிடம் வருமான வரி குறித்த பல்வேறு விதமான தகவல்களை விரிவாக விளக்கினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக புத்தகங்களை படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு காரைக்குடி வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் புத்தகங்களை பரிசாக வழங்கினார். வருமான வரி துறை தொடர்பான பல்வேறு தகவல்களையும் விரிவாக மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=lqXQpV84-qE

 https://www.youtube.com/watch?v=P9dtmGQHgvY

 

No comments:

Post a Comment