Sunday 4 September 2022

 நாணய விகடன் இதழை பொழுதுபோக்காக படியுங்கள் - வ.நாகப்பன் பேச்சு 

உழைப்பு,சேமிப்பு,முதலீடு மூலம் செல்வந்தர் ஆவது எப்படி ?

 யாரை நம்பியும் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யாதீர்கள் - உங்களை நம்பி,நன்றாக படித்து இன்வெஸ்ட் செய்யுங்கள் - விழிப்புணர்வு கருத்தரங்கம் 

 




                     நாணயம் விகடனின் மீச்சுவல் பண்டின்  மூலம்  செல்வத்தை உருவாக்கலாம்   என்ற நிகழ்ச்சி மிக அருமையாக அமைந்திருந்தது. நாங்கள் குடும்பத்துடன் எனது மாணவி,மகன் , ( லெ .சொக்கலிங்கம் ) காரைக்குடியில் இருந்து மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி மதுரை சென்று நிகழ்வில் பங்கேற்று இரவு 12.30 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு காரைக்குடிக்கு வந்தோம்.

                                நாணயம் விகடனின்  இணை ஆசிரியர் குமாரின்  வரவேற்பு பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு கொடுக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

ஆரம்பமே விழிப்புணர்வு அருமை :

                                           ஆதித்யா பிர்லாவின் கல்வி  வழி விழிப்புணர்வு தலைமை அதிகாரி  ராவ்  பேசும்பொழுது,   இன்வெஸ்ட்மெண்ட் , 4ஜி,  டாக்ஸ் பெமெண்ட் எந்த அளவிற்கு நமக்கு  மிகப் பெரிய செலவாக இருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.

தமிழ், ஆங்கிலம் போன்று பணத்தின் மொழி என்ன ?

                           லோன் நாட் அலோன் என்கிற தகவலையும், குமார் என்கிற விளம்பரத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய தகவல்களும், தமிழ் ஆங்கிலம் போன்று பணத்தின் மொழி என்பதை மிக தெளிவாக விளக்கினார். 

 

சேமிப்பின் மூலம் இளம் வயதில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

                    ஹரிஸ் , அனிதா என்கிற என் எஸ் சி யின் மியூச்சுவல் ஃபண்டு விழிப்புணர்வு தகவலின் மூலமாக இளைஞர்கள் எவ்வாறு மிக குறுகிய காலத்தில் சிறந்த சேமிப்பு மூலமாக கோடீஸ்வரர் ஆகலாம் என்கிற தகவலையும் தெளிவாக விளக்கினார் .

வீடியோக்கள் மூலம் விளக்கம் :

                           பரவலான முதலீடுகள் , குறைவான ரிஸ்க் நல்ல வருமானத்தை தரும் என்பதையும் நல்லமுறையில் எடுத்துக் கூறினார். அதற்கான வீடியோக்களையும் காண்பித்து விளக்கிய விதம் நன்றாக இருந்தது.

 எறும்பின் மூலம் செல்வதை சேர்க்கும் விதத்தை குலுங்க,குலுங்க சிரிக்க வைத்து விளக்கிய ஞானசம்பந்தன் : 

                    ஞானசம்பந்தன் அவர்கள் எப்பொழுதும் போல் அருமையாக பேசினார். ஆனால் இங்கே பணம் தொடர்பான தகவல்களையும் , அது தொடர்பான திருக்குறளையும் தேடி எடுத்து வந்து தொடர்புபடுத்தி மிக எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வகையில் கூறினார்.

                                  . தனது தந்தையார் ஒரு இட்லி தொடர்பாக  எப்படி உருவாகிறது என்பது தொடர்பாக கூறிய தகவல் அனைவரது நெஞ்சையும் கவர்ந்தது. 

                               அதேபோன்று எறும்பு  சிறியது, எறும்பின் வாய் சிறியது எறும்பு உண்ணும் உணவு தான் அது மிகவும் சிறியது என்கிற தகவலையும், அதுபோன்று நமது செலவுகளையும் வருமானத்தையும் எரும்பை கொண்டு விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. 

                                   சேமிப்பு ,முதலீடு என்பது மிக முக்கியமானது என்பதை பல்வேறு திருக்குறளின் வழியாக மிக தெளிவாக எடுத்துக் கூறினார், உழைப்பு முக்கியம், முதலீடு முக்கியம் என்பதை  தனது வீட்டையே உதாரணமாக காண்பித்து பேசிய விதம் மிகவும் நல்ல முறையில் இருந்தது.

                                இடையிடையில் அவருடைய வெடிச்சிரிப்புகளும் மிக அருமை. பூக்கடை வேலை பார்த்தவர் வெடி  கடையில் வேலை கொடுத்தால் எப்படி இருக்கும்? ,  ஹோட்டலில் வேலை பார்த்தவர் இருப்பவர் பூச்சி மருந்து கடையில் வேலை பார்த்தால் எப்படி இருக்கும்?  என்பதெல்லாம் சிந்திக்க வேண்டிய தகவல்.

                        அதுபோன்று பில்கேட்ஸ் அவர்கள் தான் படிக்கும் பொழுது கோல்ட் மெடல் வாங்க வில்லை என்றும், ஆனால் இன்று தன்னிடம் கோல்ட் மெடல் வாங்கிய பல்வேறு நபர்களை வேலை வாங்குவது கூடிய திறமை பற்றி திறன் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.

கல்யாணம் செய்யும்போது தெரிந்த செய்கிறோம், இல்லை,இல்லை அதுபோன்றுதான் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வதும் - நல்ல விளக்கம்

                                       பிறகு கலந்துரையாடலில் ஆதித்ய பிர்லா அதிகாரி சுவாமிநாதன் நல்ல முறையில் முழு நிகழ்வையும் கொண்டு சென்றார். வ.நாகப்பன் அவர்கள் வெல்த் கிரியேஷன் தொடர்பாகவும் ,பொருளாதாரத்தை தொடர்ந்து பொழுதுபோக்காக படிக்க வேண்டும் என்கிற கருத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

                               சாவரின் கோல்டு பாண்டு  தொடர்பாகவும்  தெளிவான விளக்கங்களை எடுத்துக் கூறினார். நாணய விகடன் உட்பட அனைத்து விதமான பொருளாதார இதழ்களையும் பொழுதுபோக்காக படியுங்கள்.என்று பேசினார்.

பி.வி.சுப்ரமணியம் பேச்சு :

                                       பி.வி. சுப்பிரமணியன் அவர்களை சந்தித்தது மிகவும் மறக்க முடியாத நிகழ்வு. தனது லக்கின் காரணமாகவே தனக்கு பல்வேறு விதமான நன்மைகள் நடைபெற்றதாக கூறினார்.  லக்கு என்பது சேமிப்பு ஆகும். எனவே சேமிப்பு இருந்தால்தான் அது இலக்காக மாறும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

குருபிரசாத் விளக்கம் அருமை :

                                      ஆதித்யா பிர்லா குருபிரசாத்  பேசும்பொழுது,  உங்களால் எவ்வளவு சேமிக்க  முடியுமோ அவ்வளவு சேமிக்கலாம். பேராசை தவறு.

                                மார்க்கெட் உங்கள் கண்ட்ரோலில் இல்லை,   உங்கள் முதலாளி  கண்ட்ரோல் இல்லை,  ஸ்பவுஸ்  உங்கள் கண்ட்ரோலில்இல்லை. இது போன்றுதான் மார்க்கெட் என்று கூறினார். உண்மையிலேயே மிகவும் பிடித்தமான வரிகள் இவை.

                                  வாழ்க்கையில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. நாம் யாரையும் தெரிந்து கொண்டா திருமணம் செய்கின்றோம். அதுபோன்றுதான் இன்வெஸ்ட்மென்ட். 

                                    நாம் தெரிந்து கொண்டு இன்வெஸ்ட் செய்ய முயற்சிக்கிறோம். தவறுகள் நடைபெற்றால் அதை திருத்திக் கொள்கிறோம் என்கிற தகவலை மிக தெளிவாக எடுத்துரைத்தார்.

                             எப்பொழுது வேண்டுமானாலும் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணவேண்டும் என்கிற தகவலும், யாரையும் நம்பி பணம் பணத்தை போட வேண்டாம் என்கிற தகவலையும் மிகத் தெளிவாக கூறினார். தடங்கல்கள் வரும். ஆனால் அவை சேமிப்பாக  ஆக மாற வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

உங்களை நம்பி முதலீடு செய்யுங்கள் - ராவ் பேச்சு :

                                           ராவ் அவர்கள் பல்வேறு தகவல்களையும் பணம் தொடர்பாக விரிவாக கூறினார். பிறந்தநாள் தேதி அன்று ஒரு எஸ்.ஐ.பி.. ஆரம்பித்து அந்த தேதியில் எஸ்.ஐ.பி. மாதம்தோறும் இன்வெஸ்ட் செய்து வந்தால் விரைவில் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக மாற முடியும் என்கிற தகவலை எடுத்துக் கூறினார்.

                                      அட்வைஸ் மட்டும் நம்பி பணம்  போடாதீர்கள். நீங்களும் அதனைப் படித்துப் பார்த்து முதலீடு செய்யுங்கள். உங்களுடைய பணம் உங்களுக்கானது என்கிற தகவலை மிகத்தெளிவாக அவர்கள் விளக்கினார்.

                          மொத்தத்தில் இந்த நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. நாங்கள் காரைக்குடியிலிருந்து மதியம் 2 மணிக்கு மதுரை நோக்கிச் சென்றோம். சரியாக ஐந்து பத்து மணிக்கெல்லாம் நிகழ்வு அரங்கின் உள்ளே இருந்தோம்.

                              மீண்டும் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இரவு 9 மணி அளவில் மதுரையில் கிளம்பி இரவு உணவை முடித்து விட்டு 12 30 மணியளவில் காரைக்குடியை வந்தடைந்தோம்.

நன்றிகள் பல :

                               இந்த நிகழ்வில் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து எங்களை அழைத்துச் சென்று பல்வேறு தகவல்களையும் அவர்களும் எங்களுக்கு விளக்கினார்கள்.

                    இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த நாணய விகடனுக்கும், ஆதித்யா பிர்லா வுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன், வாழ்த்துக்கள்,நன்றி.

L .சொக்கலிங்கம்,

காரைக்குடி.


பின் குறிப்பு : திரு.வ.நாகப்பன் அவர்களையும், திரு.பி.வி. அவர்களையும் சில நிமிடங்கள் தனியாக பேச சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நாங்கள் வர்களின் தனி பேச்சை கேட்கவே அங்கே வந்து இருந்தோம்.ஆனால் அவர்கள் இருவரும் போதிய அளவு நேரம் கொடுத்து பேசாதது எங்களுக்கு ஏமாற்றமே.நாங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்வுக்கு வந்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி.

 

 

 

 

 

No comments:

Post a Comment