Friday 9 September 2022

 வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

அன்பு தொடர்பான பயிற்சி 

அகம் ஐந்து புறம் ஐந்து 







 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                               பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் பௌண்டேஷன் பயிற்சியாளர்கள் குமரகுரு ,  தயானந்த் ஆகியோர் மாணவர்களுக்கு அன்பு, நேர்மை,ஒற்றுமை,பொறுப்பு  என்கிற தலைப்பில் வாழ்வியல் பயிற்சி அளித்தார்கள் .அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் மொத்தம் பத்து திறன்களை விளக்கும் விதமாக  இந்த பயிற்சி நடைபெற்றது.பயிற்சி தொடர்பாக மாணவர்கள் சந்தோஷ்குமார்,ஹரிப்ரியா,ஆகாஷ்,கனிஸ்கா,

அட்சயா  ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் 6,7,8,9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக இப்பயிற்சி வழங்கப்படுகிறது.உங்கள் பள்ளிகளில் பயிற்சி அளிக்க 9003659270, 9443117132 ஆகிய எண்களில் பௌண்டஷன் நிர்வாகி நிகில் நாகலிங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் பௌண்டேஷன் சார்பாக அன்பு, ஒற்றுமை,பொறுப்பு,நேர்மை  என்கிற தலைப்பில் பயிற்சியாளர்கள் குமரகுரு , தயானந்த் ஆகியோர்  மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தார்கள் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment