Tuesday 20 September 2022

 டிஎஸ்பி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்

வாக்குமூலம் வாயால் கூறினாலே காவல்நிலையத்தில் சிஎஸ்ஆர் பதிய போதுமானது 

டிஎஸ்பி தகவல் 









 தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை டிஎஸ்பி மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கூறி கலந்துரையாடினார்.

                          ஆசிரியை செல்வமீனாள்  வரவேற்றார்.  பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை காவல்துறை டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில்,காவல் நிலையங்களில் வாய்வழி தகவலாக புகார் கொடுத்தாலே சி எஸ் ஆர் பதிவு செய்து தரப்படும். அதற்காக .பெட்டிஷன் எழுத தெரியவில்லை என்று யாரிடமும் பணம் கொடுத்து பெட்டிஷன் எழுதி கொடுக்க வேண்டிய தேவையில்லை மாணவர்கள்  இதனை நன்றாக உங்கள் பெற்றோரிடம் எடுத்துக் கூறுங்கள்.

                     தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு எழுதி அரசின் பல்வேறு பதவிகளில் பதவிகளுக்கு வர இயலும். அதனை சிறு சிறு வயது முதலே உங்கள் மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கேற்ப படியுங்கள் .வெற்றி நிச்சயம் என்று டிஎஸ்பி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பள்ளி  தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

 

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=MKIUHKfC74c

 

No comments:

Post a Comment