Monday 28 March 2022

பயமில்லாமல் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் 

அரசு மருத்துவர் வேண்டுகோள் 

 








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

                                                  ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பார்த்திபன் மாணவர்களிடம் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பேசும்போது, அரசு விலையில்லாமல் வழங்கும் தடுப்பூசியை மாணவர்கள் ஆர்வத்துடன் பயமில்லாமல் செலுத்தி கொள்ளுங்கள்.உங்களின் பெற்றோர்களிடம், சுற்றி உள்ள பொதுமக்களிடமும் கூறி இரண்டாவது,மூன்றாவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள சொல்லுங்கள்.மற்ற பள்ளி மாணவர்களிடமும் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களிடமும் எடுத்து சொல்லி ஊசி செலுத்தி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள் என்று பேசினார்.செவிலியர்கள் ஜோசப் மேரி,கனிமொழி ஆகியோர் மாணவர்களுக்கு ஊசி செலுத்த ஏற்பாடுகளை செய்து இருந்தனர்..ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பார்த்திபன், செவிலியர்கள் ஜோசப் மேரி,கனிமொழி ஆகியோர்பங்கேற்றனர்.

 

வீடியோ : 

 

 https://www.youtube.com/watch?v=FGbXVtV28fo

 https://www.youtube.com/watch?v=CBJcGt9jZMc

 

No comments:

Post a Comment