Wednesday 2 March 2022

தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி முகாம் 

 எண் ,எழுத்து , குறியீடு மூன்றும் மிக முக்கியம் 

கடின உழைப்பு,விடா முயற்சி,தொடர் பயிற்சி இருந்தால் வெற்றி உறுதி 




 

 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காண  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான  பயற்சி நடைபெற்றது .
                                 பயிற்சி நிகழ்வில்   ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  மதுரை ரயில்வே பள்ளி ஆசிரியர் துரைபாண்டியன் மாணவ,மாணவிகளுக்கு  பயற்சி அளித்தார் .தேசிய திறனாய்வு தேர்வு குறித்தும் ,மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள்,எழுத்து தொடர்கள்,,தனித்த எண்ணை கண்டறிதல்,கேள்விகள் அமைப்பு,பதில் அளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளித்தார் .ஆசிரியர்  கேட்ட கேள்விகளுக்கு மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பதில் அளித்தனர். இத்தேர்வின் மூலம் மாணவர்கள் விரிசிந்தனை,சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல்,பகுத்தறிவும் திறன் மேம்படுவதால் தங்களின் வாழ்வியல் சிக்கலுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகின்றது.
                               இத்தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ 1000 அரசால் கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.இதை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் போட்டி தேர்வுக்கு  தயாராவது எப்படி என்பது தொடர்பாக மதுரை ரயில்வே ஆசிரியர் துரைபாண்டியன்  பயிற்சி அளித்தார்.

1 comment: