Monday 14 March 2022

  குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - மருத்துவர் அறிவுரை 

 





 


தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.

   

                           ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமை தாங்கினார் .சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரைகளை  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம் மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், மாணவர்கள் இனிப்பு சாப்பிடுவதை குறைத்து கொள்ள  வேண்டும்.கீரை மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட்டால் குடற்புழு முற்றிலும் அழிந்துவிடும்.சாப்பிடுவதற்கு முன்பும்,விளையாடிவிட்டு விட்டு வந்தபின்பும் அவசியம் கை ,முகம்,கால் கழுவி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது குடற்புழு முட்டைகள் வையிற்றுக்குள் செல்வதை அறவே தடுக்க முடியும்.நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள இயலும் என்று பேசினார். ஆரம்ப சுகாதார நிலைய  செவிலியர்  மேரி மாத்திரைகள் வழங்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

                   5 முதல் 13 வயது வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு  400 மி.கி., மாத்திரை வழங்கபட்டது.ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள  அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகளை  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம் வழங்கினார் . செவிலியர் மேரி ஏற்பாடுகளை செய்து இருந்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
வீடியோ :   
 
 https://www.youtube.com/watch?v=rGuGFDUJvlU
 
 https://www.youtube.com/watch?v=DRJIA8i8MCY
 
 
 
 
 
 

 

No comments:

Post a Comment