Thursday 17 March 2022

சட்ட விழிப்புணர்வு முகாம் 

 
நீதிபதி மாணவர்களுடன் கலந்துரையாடல் 
 
 சட்டம் தொடர்பான மாணவரின் கேள்விகளுக்கு கதைகளின் மூலம்  பதில் சொல்லி எளிதாக புரிய வைத்த நீதிபதி 







 
 
 
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது.
 
 
  நிகழ்வின் துவக்கமாக ஆசிரியை செல்வமீனாள் வாரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற  நீதிபதி முருகன்   மாணவர்களிடம் பேசுகையில்,சட்ட படிப்பு படித்தால் நிறைய  வேலைகள் உள்ளன. அவற்றிற்கு கிளாட் தேர்வு எழுதி சேரலாம்.தமிழ்நாட்டிலும் சட்ட கல்லூரிகள் உள்ளன.சட்ட படிப்பு படித்தால் ஐ.எ .எஸ்.,ஐ .பி.எஸ்.,வங்கி போன்ற பல்வேறு துறைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு அமையும்.ஒழுக்கம்,பணிவு,நேர்மை இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் .லஞ்சம் வாங்க கூடாது.நாம் செய்யும் வேலையில் தப்பு பண்ணக்கூடாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க அதிகமான சட்டங்கள் உள்ளன.வீட்டில் எப்படி அண்ணன் ,தங்கைக்குள் சண்டை வரும்போது அம்மாவிடம் சென்று தீர்ப்பு கேட்பது போல் , இரு ஊர்களுக்கு,குடும்பங்களுக்குள் சண்டை வரும்போது நீதிமன்றம் நோக்கி வருகின்றனர்.எனவே, நீதிமன்றம் அம்மா,அப்பா போன்றது.என்று பேசினார்.பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம், குற்ற மற்றும் சிவில் வழக்கு தொடர்பான தகவல்கள்,குழந்தை சட்டங்களின் அடிப்படை கூறுகளை விரிவாக விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார் . 2020ம் ஆண்டு இணைய வழியில் நடைபெற்ற சட்டப்பணிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் சிறப்பு பரிசுக்கு தேர்வாகிய இப்பள்ளி மாணவர்கள் கீர்த்தியா,ஜோயல் ஆகியோருக்கு புத்தக பரிசுகளை நீதிபதி வழங்கி பாராட்டினார்.தேவகோட்டை  வட்ட சட்ட பணிகள் குழுவின் அலுவலர் வெற்றி செல்வன்  நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.மாணவர்கள் சந்தோஷ்,முத்தய்யன் ,நதியா,தேவதர்ஷினி,ஸ்ரீதர்,மெர்சி ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.
 
 
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும்,சார்பு நீதிமன்றங்களின் நீதிபதியுமான முருகன்  மாணவர்களுடன் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்த்தினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.
 
வீடியோ :
 
 https://www.youtube.com/watch?v=wJzR1Kh8-FY
 
 https://www.youtube.com/watch?v=HT1iJiGx7NE
 
 https://www.youtube.com/watch?v=jmeqgvj_0_c
 
 
 
 
 

 

No comments:

Post a Comment