Saturday 19 March 2022

 பரிசளிப்பு விழா 

  தானத்தில் சிறந்த தானம் நிதானம் - மாணவர்களுக்கு அறிவுரை

அறக்கட்டளை நிர்வாகி  பேச்சு 





 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                                            ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை செயலர் சண்முகம் ,  அறக்கட்டளை நிர்வாகிகள் சிதம்பரம் , நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் . அறக்கட்டளை  நிர்வாகி  அய்யப்பன் பேசுகையில் , கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.கண்முன் கஷ்டப்படுவபவர்களுக்கு உதவ வேண்டும்.தானத்தில் சிறந்தது அன்னதானம். அதையும் தாண்டி சிறந்தது நிதானம்.எதிலும் பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும்.தேர்வு எழுத பட,பட என்று செல்லக்கூடாது.நிதானமாக சென்று எழுதினால் படித்தது என்றும் மனதில் நிற்கும். நிதானமாக இருக்கிறேன் என்று சோம்பேறித்தனமாக செயல்படக்கூடாது. போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் ஹரிஹரசுதன் , நதியா,முத்தய்யன் ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது . நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை செயலர் சண்முகம்,  நிர்வாகிகள் சிதம்பரம்,நாச்சியப்பன் ,   அய்யப்பன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=3lybZ0271jg

 

 https://www.youtube.com/watch?v=HyyiQnRGamI

 

 

No comments:

Post a Comment