Friday 11 March 2022

எளிய அறிவியல் சோதனைகள்  

 



 தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

                                      ஆசிரியை முத்துலெட்சுமி   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  பயிற்சியாளர்கள் சேகர்   மற்றும் அரங்குலவன்  ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.
ஒளியியல்,ஒளி ஊடுருவதல் ,ஒளிக்கதிர்,குவிக்கற்றை,விரிக்கற்றை,ஒளி எதிரொளிப்பு , சமதள ஆடி,காந்தவியல் ,சட்டக்காந்தம் ,காந்த ஈர்ப்பு விசை,காந்த திசை போன்றவற்றை  தெளிவாக விளக்கம் அளித்தனர். மாணவர்கள்  கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.அ .மு.மு.  அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக
பயிற்சியாளர்கள் சேகர்  மற்றும் அரங்குலவன்  ஆகியோர்   மாணவர்களுக்கு  நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து  காண்பித்தனர்.


 

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=fvzxsbcLx9k

 https://www.youtube.com/watch?v=fpAgxRvFWsU

 

 

 

No comments:

Post a Comment