Monday 21 March 2022

உலக தண்ணீர் தினம்

கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 

இளம் வயதிலேயே தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் - வட்டாட்சியர் அறிவுரை 







  தேவகோட்டை - உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

  நிகழ்ச்சியில் ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வட்டாட்சியர் அந்தோணி ராஜ்  தலைமை தாங்கி தண்ணீர் சேமிப்பு தொடர்பாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஹரிஹரசுதன் , சபரீஸ்வரன்,வள்ளியம்மை,நதியா,முகேஷ்,அஜய்,முத்தய்யன்,ஹரிப்பிரியா  ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார். எட்டாம் வகுப்பு மாணவர்கள் நீரை சேமிப்போம் என்கிற பாடலை குழுவாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.


பட விளக்கம் ; உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தேவகோட்டை வட்டாட்சியர் அந்தோணி ராஜ்  தலைமை தாங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
 
வீடியோ : உலக தண்ணீர் தினம் தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பாடல்கள்,கவிதை,பேச்சு 
https://www.youtube.com/watch?v=NOggLUluOH4
https://www.youtube.com/watch?v=6qhAHqzFBvU
https://www.youtube.com/watch?v=LgbgS1qnPWo

 

No comments:

Post a Comment