Monday 30 November 2020

 தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்ட துவக்க விழா 


தேவகோட்டையில் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்

 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தினை கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்.

                                            தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் , 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையமான நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் இத்திட்டத்திற்கான துவக்க விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்திராணி நிகழ்வினை துவக்கி வைத்து பேசுகையில் ,  முதலில் தன்னார்வலர்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.எந்தவிதமான பணபலனும் இல்லாமல் சொர்ணம்பிகா  இந்த பணியை பார்ப்பதற்கு ஏற்றுக்கொண்டது பாராட்டுக்குரியது.தமிழக அரசின் இந்த திட்டத்தை மக்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்தி எழுதி படிக்க கற்றுகொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறினார் . தன்னார்வலர் சொர்ணாம்பிகா பயிற்சி வழங்கினார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்தமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.பயிற்சி பெறுபவர்களுக்கு தமிழக அரசின் பயிற்சி கட்டகம் அடங்கிய புத்தகம்  வழங்கப்பட்டது.தமிழக அரசின்
கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட, கல்வி அறிவு இல்லாதவா்களுக்கு தினமும் 2 மணி நேரம் கற்பித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலத்திற்குள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து எழுதி படிப்போம் என்று பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.                            

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தினை தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்திராணி  துவக்கி வைத்து பயிற்சி கட்டகள் அடங்கிய புத்தகங்களை அனைவருக்கும் வழங்கினார்..பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் சொர்ணாம்பிகா பயிற்சி வழங்கினார்.







No comments:

Post a Comment