Saturday 7 November 2020

 இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு

பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கும்,வாகனங்களுக்கு வழிகாட்டுவதற்கும் பயன்படும்  செயற்கைகோள் 

 

இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த மாணவர்கள்

 



 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே
பாராட்டு தெரிவித்தனர்.
                                            

                      இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள் களை நிலை நிறுத்தி வருகிறது. தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

                    இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டு  உள்ளது. இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து  திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 51 வது ராக்கெட் ஆகும். 
                                  மேலும், நவீனரக இஓஎஸ்- 01 செயற்கைகோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை,  காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும் என்கிற தகவலை மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவித்தனர். 

 

 
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்த தகவலை மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக எடுத்து கூறியதுடன் பாராட்டும் தெரிவித்தனர்.

 

 செயற்கைகோள் சிறப்புகள் தொடர்பாக  மாணவர் ஈஸ்வரன் பேசும் வீடியோ 

 https://www.youtube.com/watch?v=3mf5krgUs0c

 

 

No comments:

Post a Comment