Sunday 15 November 2020

 ஆசிரியர்களே நல்ல சமுதாயத்திற்கான - தேசத்திற்கான அடித்தளம் அமைப்பவர்கள் 

 திசைகள் விழாவில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு 













 

  அறந்தாங்கி -புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு சார்பாக திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டத்துக்கு புத்தகங்கள்   வழங்கும் நிகழ்வு அறந்தாங்கியில் நடைபெற்றது.அதனில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர் சொக்கலிங்கத்தின் பல்வேறு முயற்சிகளை பாராட்டி திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி வழிகாட்டுதலின்படி திசைகளின் பொருளாளர் முபாரக் புத்தகப் பரிசு வழங்கினார். நிகழ்வில் மூத்த உறுப்பினர் அப்துல் கரீம், அப்துல் ரஹீம், பள்ளி தாளாளர் முபாரக் அலி, வங்கி மேலாளர் காசிவிசுவநாதன், கல்லூரி தாளாளர் அப்துல் பாரி , வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம், மணமேல்குடி அரசுப்பள்ளி உதவியாளர் செந்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாஸ்கரன், சுரேஷ் ராஜா, தொழிலதிபர்கள் தாஜுதீன், கான் கபார்கான், திசைகள் மின்னி தழின் ஆசிரியர் அண்ணாதுரை, பொறியாளர் பூங்குன்றன், பயிற்சியாளர் செல்வா உட்பட பலர் பங்கேற்றனர். திசைகளின் பொருளாளர் முபாரக் பேசுகையில், சமுதாயத்தின் வெற்றிக்கு காரணம் ஆசிரியர்களே என்றும் ,ஆசிரியர்களே நல்ல சமுதாயத்திற்கான ,தேசத்திற்கான அடித்தளம் அமைப்பவர்கள் , ஆசிரியர்களை கொண்டாடும் சமுதாயமே முன்னேறும் என்றும் தெரிவித்தார்.நிகழ்வில் திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டத்துக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

பட  விளக்கம் : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு சார்பாக திசைகள் நூலக அன்பளிப்பு திட்டத்துக்கு புத்தகங்கள்   வழங்கும் நிகழ்வு அறந்தாங்கியில் நடைபெற்றது.அதனில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி திசைகள் அமைப்பின் பொருளாளர் முபாரக் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு புத்தக பரிசு வழங்கினார்.

 

 

 

 

 

No comments:

Post a Comment