Sunday 22 November 2020

  ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

கோடை, மதுரை - பண்பலை நிகழ்ச்சி பொறுப்பாளர் சவித்ரா @ ராஜாராம் அவர்களுடனான பள்ளி அனுபவங்கள்

 கனவை நினைவாக்கிய அகில இந்திய வானொலி 


 

           இது கனவா ? நிஜமா ? என்று நினைக்கும் அளவிற்கு அகில இந்திய வானொலி பண்பலையில் தொடர்ந்து 18 வாரங்கள் எனவும், வாரத்தில் இரண்டு நாட்கள் எனவும், மொத்தம் 36 நாட்கள்எனவும் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள நடுநிலைப் அளவிலான மாணவர்களின் நிகழ்ச்சியை வானொலியில் ஒளிபரப்பிய சவித்ரா @ ராஜாராம் அவர்களுடனான பழக்கம்  எப்படி ஏற்பட்டது ?

 

சவித்ரா அவர்களுடனான பழக்கம்

கோடை பண்பலையில் அனைவராலும் அறியப்பட்ட சவித்ரா அவர்களுடனான பள்ளி அனுபவங்கள் மிகவும் புதுமையானது. மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவர்களின் நிகழ்ச்சி ஒலிப்பதிவிற்காக செல்லும்போதெல்லாம் சவித்ரா என்கிற ராஜாராம் அவர்களை சந்தித்து பேசிவிட்டு வருவேன்.  இரண்டு ஆண்டுகளாக அவர்களுடன் பேசும்போது,  பாம்சி மருத்துவமனையின் ஒரு மணித்துளி போட்டியில்   உங்கள் பள்ளி மாணவர்களை பங்கேற்க வையுங்கள் என்று தொடர்ந்து என்னிடம் கூறி வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக நன்றாக பயிற்சி கொடுத்து  மாணவர்களை தயார் செய்துசவித்ரா அவர்களிடம் தேதியும் வாங்கி ஒரு நாள் குறித்தோம். அந்த குறிப்பிட்ட நாளில் அவர்களால் வர இயலவில்லை. மீண்டும் ஒரு நாள் குறித்தோம். அந்த குறிப்பிட்ட நாளில் சவித்ரா அவர்கள் வருவதாக உறுதி அளித்திருந்தார்கள். பாம்சி மருத்துவமனையின் மருத்துவர் புகழேந்தி அவர்களும் வருவதாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் பாம்சி மருத்துவமனையின் மருத்துவர் வரவில்லை. 

 பரபரப்பான நிமிடங்கள் :

          சவித்ரா அவர்களும், அவருடைய உதவியாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் பள்ளிக்கு காலையில் பத்து மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள். ஆனால் வெளியிலிருந்து  ஒலிப்பதிவிற்காக  ஏற்பாடுகள் செய்திருந்த குறிப்பிட்ட ஒரு மைக் செட் திடீரென வேலை செய்யவில்லை. சவித்ராஅவர்களும், உதவியாளர் ஜெயச்சந்திரன் அவர்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்து அதனை ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.  பலரது கூட்டு முயற்சிக்கு பிறகு நிகழ்ச்சி 11 மணிக்கு மேல ஆரம்பித்தது .சவித்ரா அவர்கள் மிக எளிமையாக மாணவர்களுடன் பேசினார்கள். 

 மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆளுமை :

இளம் வயது மாணவர்களுக்கு தகுந்தவாறு பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். தகவல் கொடுக்க வேண்டிய   இடத்தில் தெரியப்படுத்தி, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க வைத்து அன்பான முறையில் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். 

விடா முயற்சி எடுத்து பரிசு வழங்குதல் :

            இடையில் மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்காக பணம்  எடுப்பதற்காக மதிய உணவிற்கு பிறகு நாங்கள் சுமார் 6 ஏடிஎம் இயந்திர மையங்களுக்குச் சென்று பணம்  எடுக்க முயற்சி செய்தோம். அனைத்து இடத்திலும் கூட்டமாக இருந்ததால் எங்களால் பணம்  எடுக்க இயலவில்லை. நிறைவாக ஏழாவது ஏடிஎம்மில் சென்று வரிசையில் நின்று பணம்  எடுத்த பிறகுதான் சவித்ரா அவர்கள் என்னை பள்ளிக்கு அழைத்து வந்தார்கள். இரவு 8 மணி வரை காத்திருந்து அனைத்துச் சுற்றுகளையும்  நிறைவு செய்து மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டி சென்றார்கள். பிறகு இரவு 11. 30 மணியளவில் வீட்டிற்கு சென்று அடைந்ததாக மறுநாள் தெரிவித்தார்கள். சவித்ரா அவர்களுடனான அனுபவங்கள் மறக்க முடியாதது. 

 சவித்ரா அவர்களுடன் ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்ட நேயர் :

                   எங்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜோயல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடைய அம்மா அரசு பள்ளி ஆசிரியை அவர்கள். அவர்கள்   தனது மகனை அழைத்துச் செல்ல இரவு 8 மணிக்கு பள்ளிக்கு வந்திருந்தபோது, என் மகன் ராஜாராம் அவர்கள் வந்திருப்பதாக  என்னிடம் தெரிவித்தார். சவித்ரா என்று கூறவில்லை . சவித்ரா என்கிற உங்களுடைய பெயர் தான் எனக்கு தெரியும் . கோடை பண்பலையில் தாங்கள் பேசும் பொழுது நான் மிகவும் ஆர்வமாக கேட்பேன். உங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகவும் ஆர்வமாக கேட்பேன் என்று கூறி அவர்களுடன் அருகிலிருந்து படம் எடுத்துக் கொண்டார்கள். சவித்ரா அவர்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் என்றும் பாராட்டு தெரிவித்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்திப்பது நம்ப முடியுமா என்றும், இதுவரை வானொலியில் மட்டுமே கேட்டிருந்த குரலின்  சொந்தக்காரர் நேரில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியாய்  இருப்பதாக  தெரிவித்தார்கள். சுமார் 22 மாவட்டங்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட நேயர்களை சென்றடையக்கூடிய கோடை பண்பலையின்  சவித்ரா அவர்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார்கள். 

 சவித்ரா அவர்களுடனான சந்திப்பு மகிழ்வானது :

                  சவித்ரா அவர்களது வருகை எங்கள் பள்ளிக்கு மிகவும் நல்ல விஷயமாக அமைந்திருந்தது.  சவித்ரா அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் என்னுடைய அனுபவம் மறக்க முடியாது .மிகவும் அன்பாக, பொறுமையாக பல்வேறு தகவல்களை பல்வேறு விதங்களில் என்னிடம் எடுத்துக் கூறினார்கள். அவருடைய ஒவ்வொரு அசைவும் சமுதாய முன்னேற்றம் உடையதாக இருந்தது. சமீபத்தில் கோவிட் நேரத்தில் பல மருத்துவர்களை மதுரை வானொலிக்கு வரவழைத்து நேரடியாக பேட்டிகள்  எடுப்பதை  கண்டு  ரசித்தேன். சவித்ரா அவர்களுடைய நட்பு கிடைத்தது மகிழ்வானது. 

 நன்றிகள் பல :

                 பல மைல் தூரங்கள் பயணம் செய்து  எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்த சவித்ரா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய உதவியாக வானொலி நிலையத்தின் நிலைய இயக்குனர் (பொறுப்பு)  ஜோதிமணி அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து எங்களுக்கு வழிகாட்டினார்கள் .  அவர்களும் அன்று வரவேண்டிய சூழ்நிலை. கடைசி நேரத்தில் பல்வேறு பணிகளின் காரணமாக வர இயலவில்லை என்று தெரிவித்தார்கள் . பாம்சி மருத்துவமனையின் மருத்துவர் புகழேந்தி அவர்களும் , மதுரை வானொலி நிலைய பொறுப்பாளர் ( பொறுப்பு ) ஜோதிமணி அவர்களும் மீண்டும் ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வருவதாக  சவித்ரா  அவர்கள் என்னிடம் தெரிவித்து இருந்தார்கள். அவர்களுடைய வரவையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். மிக்க நன்றிகள் பல.

கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியில் ஆர்வத்துடன் இளம் வயது நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது பாராட்டுக்குரியது :

                  வானொலியில் பேசுவோமா என்று பலரும் காத்திருக்கும் நேரத்தில் வானொலி நிலையமே  எங்கள் பள்ளிக்கு வந்தது பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பெருமையாக இருந்தது.சவித்ரா  அவர்களை பலரும் வானொலியில் கேட்டு ரசித்து இருக்கிறார்கள். ஆனால் நேரில் சந்தித்து அவர்களுடனான நிகழ்ச்சியில் பங்கேற்று, பழகியது இளம் வயது மாணவர்களுக்கு நல்ல விசயமாகும் .கல்லூரி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட  ஒரு மணி துளி போட்டியில் - ஆளுமைகளை வளர்க்க கூடிய போட்டியில் நடுநிலைப் பள்ளியில் பயிலும் இளம் வயது மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுத்து பங்கேற்க வைத்த சவித்ரா என்கிற ஆளுமைக்கு மீண்டும் நன்றிகள் பல . 

தமிழக அளவில் முதல் பள்ளி :

             தமிழக அளவில்  நடுநிலைப் பள்ளி அளவில் இப்போட்டியில் பங்கேற்ற முதல் பள்ளி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த வாய்ப்பை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய அகில இந்திய வானொலிக்கு மிக்க நன்றிகள் பல.

 

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

8056240653

பள்ளியில் நடைபெற்ற ஒருமணி தூளி போட்டி தொடர்பான நிகழ்வுகளை YOU TUBE வழியாக காணலாம் :

https://www.youtube.com/watch?v=0Hv9_QYtHWo

https://www.youtube.com/watch?v=wZhiOjGLYt8

https://www.youtube.com/watch?v=1caCerjGMPY

https://www.youtube.com/watch?v=zjvbfyGaVM8


பள்ளியில் நடைபெற்ற ஒருமணி தூளி போட்டி தொடர்பான நிகழ்வுகளை வலைத்தளம் வழியாக காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2020/02/1000_8.html#more




No comments:

Post a Comment