Friday 6 November 2020

  பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றி பெற பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே பிரார்த்தனை


 
 





தேவகோட்டை -  பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது. கவுண்ட்டவுனை முடித்து கொண்டு நாளை மாலை 3.02 மணிக்கு  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.இந்த தகவலை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் இணையம் வழியாக   தெரிவித்தார்.இதனையடுத்து பள்ளி மாணவர்கள் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வேண்டி வீட்டிலேயே  பிரார்த்தனை செய்தனர்.இதனை  வடிவமைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ,தலைவர் சிவன் அவர்களது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வேண்டி வீட்டிலேயே  பிரார்த்தனை செய்தனர்.  .

 

 

 

No comments:

Post a Comment