Sunday 15 November 2020

 காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி திசைகள் குழுவிற்கு ஒரு பயணம் 

நன்றி , நன்றி,நன்றி.



                     நண்பர்களுக்கு வணக்கம். இன்று காலை எனது பிறந்த நாளை நினைவு படுத்தும் வகையில் திசைகளின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் வாழ்த்து தெரிவித்து திசைகள் குழுவில் வாழ்த்து பதிவு செய்தார்கள் .  அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் நான் தொடர்பு கொண்டு பேசி நன்றி தெரிவித்தேன். அப்பொழுது திசைகள் குழுவின் சார்பாக அறந்தாங்கியில் இன்று பிறந்தநாள் விழாவாகவும், நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சியாகவும்  நடத்தலாம் என்று என்னிடம் தெரிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக திசைகள் குழுவின் பொருளாளர் முபாரக் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு காலை 11 மணிக்கு பர்வின் கிப்ட் சென்டருக்கு வருகை தருமாறு அன்புடன் அழைதார்கள்.திசைகள் அமைப்பின் அன்பான அழைப்பை  ஏற்று அங்கு சென்று சென்றவுடன் என்னை மிகவும் அன்புடன்  திசைகள் இதழின் ஆசிரியர் அண்ணாதுரை அவர்களும்,  பொருளாளர் முபாரக் அவர்களும் வரவேற்றார்கள். பிறகு மணல்மேல்குடியிலிருந்து கணவனும் மனைவியுமாக  வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம் செந்தில் அவர்கள் வருகை தந்தார்கள். நீண்ட தூரத்திலிருந்து அவர்கள் இருவரும் மழையையும் பொருட்படுத்தாமல் டூவீலர் மூலமாக அறந்தாங்கி வந்தது எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. தொடர்ந்து சுரேஷ் ஆசிரியர் அவர்களும், பாஸ்கர் ஆசிரியர் அவர்களும், திரு.செல்வா அவர்களும், வங்கி மேலாளர் காசிவிசுவநாதன் அவர்களும் வருகை தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்னும் நண்பர்கள் கரீம் அவர்களும், எங்களுக்கெல்லாம் முன்பாக எவர்கிரீன் பள்ளியின் தாளாளர் முபாரக் அலி அவர்கள் அங்கே இருந்தார்கள். ஆன்லைன் சென்டர் நடத்தும் கான் கபார் கான் அவர்களும்,கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அப்துல் பாரிஸ் அவர்களும் , தாஜுதீன் அவர்களும் வருகை தந்தார்கள்.  திசைகள் மின்னிதழின் நிர்வாக குழுவில் உள்ள பொறியாளர்  பூங்குன்றன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். அனைவரும் என்னிடம் அன்பாக பேசினார்கள். எனது பணியை பற்றியும்,  எங்களது பள்ளியைப் பற்றியும் நல்ல தகவல்களை வெளிப்படுத்தினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  வாழ்த்துக்களை கேட்கும் பொழுதும் இன்னும் உற்சாகத்தையும்,  ஊக்கத்தையும் கொடுக்கும் வகையில் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக மதியம் ஒரு மணி அளவில் திசைகளின்  பொருளாளர் முபாரக் அவர்களது வீட்டில் பிரியாணியுடன் விருந்து கிடைத்தது. விருந்து மிகவும் அருமையாக இருந்தது. குறைந்த நேரத்தில் முடிவெடுத்து அதனை உடனே செயல்படுத்திய பொருளாளர் வீட்டில் உள்ள அனைவரின் உதவிக்கும் மிகுந்த நன்றிகள் பல. தொடர்ந்து விருந்து சாப்பிட்டு முடித்த பிறகு வெத்தலை, பாக்கு முதலியவையும் மிக அருமையாக கொடுத்தார்கள். அதன் பிறகு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டுமருத்து வழங்கினார்கள் .பிரியாணி சாப்பிட்டு செரிப்பதற்காக நாட்டு மருந்து வழங்கப்பட்டது. கருப்பு கலரில் உருண்டை ஒன்றும் கொடுத்தார்கள்.திரு.முபாரக் அவர்களின் குடும்பத்துக்கு மிக்க நன்றி. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இஞ்சி டீயும் வழங்கினார்கள். இன்று ஒரு நாள் முழுவதும் திசைகளின் நண்பர்களுடன் இருந்த மகிழ்வான நேரம் மறக்க முடியாது. திசைகளின் தலைவர் தக்ஷிணாமூர்த்தி அவர்கள் சென்னையில் இருந்தாலும்  அமைப்பின் மூலமாக நல்ல முறையில் உற்சாக கவனிப்பு நடந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது . கடந்த ஆண்டு மாலையில் நடைபெற்ற எனது பிறந்த நாள் விழாவின் நிகழ்வானது இன்று பகலில் அனைவரின் வாழ்த்துக்களுடன் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியாகவும் , ஊக்கப்படுத்தும் செயலாகவும் அமைந்தது.  நண்பர்களின் மூலமாக பல  ஊர்களில் இருந்து வந்து இருந்து, பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய நண்பர்களின் மூலமான சந்திப்பு உற்சாகத்தையும் , நல்ல அன்பையும் எனக்குள் ஏற்படுத்தியது . அனைவரது வருகைக்கும், இதற்கு ஒப்புதல் அளித்து செயல் திட்டம் வழங்கிய நம் மருத்துவர் தலைவர் தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கும் ,பொருளாளர் முபாரக்  அவர்களுக்கும், திசைகள் அமைப்பின் அனைவருக்கும் எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். நிகழ்வின் நிறைவாக திசைகளின் புத்தக குழுவிற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நன்றிகள் பல.

லெ .சொக்கலிங்கம்,

தலைமையாசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,

தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

8056240653

 

 

 

 

 

 

No comments:

Post a Comment