Wednesday 2 December 2020

      மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை விலையில்லாமல் செய்யுங்கள் - கல்லூரி முதல்வர் அறிவுரை

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

நான்காம்  முறையாக அரசி , பருப்பு  வழங்குதல் 







 

 அரிசி மூன்று  கிலோ150 கிராமும் , பருப்பு ஒரு  கிலோ 175 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 சமுதாயத்தில் சிறு குழந்தைகளுக்கும் ,பெண்களுக்கும் ஆதரவு கொடுங்கள் - கல்லூரி முதல்வர் வேண்டுகோள்

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

                               கொரோனா தொற்று பரவலால் சில  மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், கடந்த சில  மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக  வழங்கப்பட்டு வருகிறது . அதனுடன் ஒவ்வொரு மாணவருக்கும் முட்டைகளையும்  வினியோகிக்கப் பட்டுவருகிறது .  இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர் பொருள்களை தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கல்வி என்பது தான் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற  எண்ணத்தை கற்றுக் கொடுக்கக் கூடியது. விலையில்லா பொருட்களை தமிழக அரசிடமிருந்து மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் பெறும்பொழுது பிற்காலத்தில் மற்றவர்களுக்கு  நம்மால் முடிந்த உதவிகளை  விலையில்லாமல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் தற்போதே விதைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு  பேசினார்.

                  பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள், சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி, சமையலர் சரசு  ஆகியோர் செய்து இருந்தனர்.   பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.தொடர்ந்து நான்காவது  முறையாக அரசி,பருப்பும் பெற்றது  தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். தற்போது  21 நாட்களுக்கான அரசியும்,பருப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                                            


ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்  .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ,சமையலர் சரசு ஆகியோர் செய்து இருந்தனர். 

 

மேலும் விரிவாக :

 சமுதாயம் குறிப்பாக இரண்டு பேருக்கு ஆதரவு தரவேண்டும். ஒரு பிரிவினர் சிறுவர்-சிறுமியர் மற்றொரு பிரிவினர் பெண்கள். சமுதாயத்தில் நாம் மட்டுமே கஷ்டப்படுகிறோம் என்று உங்களை மட்டுமே நீங்கள் எண்ணிக் கொள்ளாதீர்கள் . மிகப்பெரும்பாலான மக்கள்  சமுதாயத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர். கல்வி என்பது மனப்பாடம் செய்வதற்காக மட்டுமே அல்ல. கல்வி என்பது தான் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற  எண்ணத்தை கற்றுக் கொடுக்கக் கூடியது. விலையில்லா பொருட்களை தமிழக அரசிடமிருந்து மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் பெறும்பொழுது பிற்காலத்தில் மற்றவர்களுக்கு  நம்மால் முடிந்த உதவிகளை  விலையில்லாமல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் தற்போதே விதைத்து கொள்ள வேண்டும். அதை செடியாக , மரமாக மாற்றி பெரும்பாலோனோருக்கு விலையில்லாமல் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்து உதவிகளையும் தாங்கள் பிற்காலத்தில் செய்ய வேண்டும்.

                     பெற்றோரிடம் இருந்து நாம் பிள்ளைகளாக பிறப்பதே விலையில்லாமல் இலவசமாகத் தான் பிறக்கின்றோம். பிறகுதான் பல்வேறு தேவைகள் கருதி விலை கொடுத்து பல தகவல்களை வாங்க வேண்டி இருக்கின்றது. விலையில்லாமல் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். எவ்வளவு அசுத்தமான தண்ணீராக இருந்தாலும் சூடு செய்து குடித்தீர்கள் ஆனால் அதில் எந்தவிதமான அசுத்தமும் கலப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே விலையில்லாமல் அனைத்து பொருட்களையும் மற்றவர்களுக்கு கொடுத்து அன்பை பெருக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் அவர்கள் பேசினார்கள்.

 வீடியோ -

 https://www.youtube.com/watch?v=YOoERR7L-GY

 https://www.youtube.com/watch?v=ZY5kMl5S9Rg



 

No comments:

Post a Comment