Wednesday 25 November 2020

 

டெங்கு காய்ச்சல் - பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்

 டெங்குவை   ஒழிக்க இணையம் வழியாக களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள் 

 

``இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் " - பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !


 






























தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்,இணையம் வழியாக   டெங்கு விழிப்புணர்வு பணியில்   ஈடுபட்டனர்.
 
     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக டெங்கு  காய்ச்சல் குறித்து விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோரின் ஆலோசனையின்படி   மாணவர்கள், தாங்களே இணையம் வழியாக பேசியும், ஓவியம் வரைந்தும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டனர். பள்ளி செயல்பட்ட கடந்த ஆண்டுகளில்  மாணவர்கள் நேரடியாக பொதுமக்கள் வசிப்பிடத்துக்கே சென்று ஆங்காங்கே பொதுமக்களையும்,உடன் படிக்கும் மாணவர்களையும் டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது தொடர்பாக செயல் விளக்கம் கொடுத்து வந்துள்ளனர் என்பது பாராட்டுக்குரியது..மாணவர்களே தாங்கள் வசிக்கும் தெருவில் சென்று  கிடக்கும் தேங்காய் சிரட்டை,மட்டை உட்பட டெங்கு உருவாக்கும் பொருள்கள் கிடந்தால் அவற்றை சுத்தமும் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலமாக இருப்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக விழிப்புணர்வு வழங்கி பொதுமக்களை உஷார்படுத்தி உள்ளனர்.
பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக டெங்கு  காய்ச்சல் குறித்து விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பணியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோரின் ஆலோசனையின்படி   மாணவர்கள், தாங்களே இணையம் வழியாக பேசியும், ஓவியம் வரைந்தும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 

 

மாணவர்களின் விழிப்புணர்வு பேச்சுக்களை வீடியோவாக காணலாம் :

 https://www.youtube.com/watch?v=yEJ755OQuY8

 https://www.youtube.com/watch?v=ZtZROVST6nQ

 https://www.youtube.com/watch?v=8BL-ZvIjyIg

 https://www.youtube.com/watch?v=y2FqGpopitQ

 https://www.youtube.com/watch?v=pT0ANPr8z8U

  https://www.youtube.com/watch?v=rcHEsuegb60

 

 

 

 

 

No comments:

Post a Comment