Monday 9 November 2020

 இணையம் வழியாக நடைபெற்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு பட்டிமன்றத்தில் பங்கேற்ற  மாணவர்களுக்கு பாராட்டு 








 

தேவகோட்டை  - தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மாணவர்களுக்கு இணையம்   வழியாக நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் பங்கேற்ற  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

                 இணையம்  வழியாக நீதிமன்றம் சார்பில்   மாணவர்களுக்கு நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் சட்ட விழிப்புணர்வு தொடர்பாக இப்பள்ளியில்  பயிலும் ஜோயல்,கீர்த்தியா,நதியா,ஈஸ்வரன் ஆகிய நான்கு மாணவர்கள் பேசினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.   இந்நிகழ்வில் இணையம் வழியாக பங்கு பெற   இப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை முத்துமீனாள் ஆகியோர்  ஒருங்கிணைத்தார்கள் . இணையம்  வழியாக நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்கள் நீதிபதிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பங்கு பெற்றது புதிய அனுபவமாக இருந்ததாக  மாணவர்கள் நான்கு பெறும் தெரிவித்தனர் . பட்டிமன்றத்தில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் கீர்த்தியா  மற்றும் ஜோயல் ரொனால்ட் ஆகிய இருவரும் சிறப்பு பரிசினை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது பாராட்டத்தக்கது.விரைவில் நீதிமன்ற வளாகத்தில்  நடைபெறும் விழாவில்  மாணவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்து உள்ளனர். கொரோனா நேரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் செய்லபட இணையம் வழியாக சட்ட விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்திய  சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு பள்ளி சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

 படவிளக்கம் : தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மாணவர்களுக்கு இணையம்   வழியாக நீதிபதிகள் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் பங்கேற்ற  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 


No comments:

Post a Comment