Friday 29 November 2019

 பள்ளியில் செடி வளர்க்கும் மாணவர்கள்








தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களே பயன்தரும் செடிகள்,விதைகளை கொண்டு வந்து   வளர்த்து வருகின்றனர்.

                        
                                              பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்களிடம் பேசும்போது, இளம் வயதில் நீங்கள் நல்ல பண்புகளை கற்றுக்கொண்டு அதனை மென்மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும் .செடி வளர்ப்பதை இளம் வயதிலேயே பழக்கமாக்கி கொள்ள வேண்டும். மழைக் காலமாக இருக்கும் காரணத்தினால் தங்கள் வீடுகளில் கிடைக்கும் விதைகளைக் கொண்டு வந்து பள்ளியில் நட்டு வைத்து வளர்க்குமாறு அறிவுரை  வழங்கினார் .அதன் தொடர்ச்சியாக மாணவர்கள்  அவர்,அவர்  வீடுகளில் கிடைக்கும் காய்கறிகளில் இருந்து விதைகளை கொண்டு வந்து பள்ளியில் பயிரிட்டு வளர்க்கின்றனர். பள்ளி வளாகத்தில் துளசி , தூதுவளை,  கருவேற்ப்பிலை , பசலைக்கீரை ,தக்காளி ,மிளகாய் ,பூசணி ,புடலை ,வெண்டைக்காய் போன்ற பல்வேறு விதைகளையும் செடிகளையும் அவர்களாகவே கொண்டு வந்து பள்ளியில் நட்டு வளர்த்து வருகின்றனர் .மாணவர்கள் பாலமுருகன், மகாலிங்கம் மூர்த்தி, சந்தியா ,முகேஷ், சூர்யா, ஓவியா ,திவ்யதர்ஷினி ,கிருத்திகா,ஸ்வேதா,கீர்த்தியா உட்பட  பல்வேறு மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்று செடிகளை கொண்டு வந்து அவர்கள் பெயரிட்டு அவர்களாகவே பள்ளியில் செடிகளை வளர்த்து அங்கு விளையும் காய்கறிகளை பள்ளி சத்துணவுக்கு  அளித்து வருகின்றனர் என்பது பாராட்டத்தக்க விஷயமாகும்.  ஆசிரியை செல்வமீனாள் ,ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மாணவர்கள் செடிகளை நடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.ஆசிரியர்கள்,மாணவர்களின் ஒத்துழைப்போடு 20க்கும் மேற்பட்ட மரங்கள் பள்ளி வளாகத்திலும்,வெளியிலும் பெரிய அளவில் வளர்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

 படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் ஆர்வத்துடன்  விதைகளையும் செடிகளையும் கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் நட்டு வளர்த்து வருகின்றனர் .






No comments:

Post a Comment