Tuesday 26 November 2019

கார்டோசாட்-3 செயற்கைகோள் வெற்றிக்கு  பள்ளி மாணவர்கள் பாராட்டு

செயற்கைகோள் ,ராக்கெட் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு 

 
பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் சிறப்பு குறித்து விரிவாக பேசும் மாணவி கீர்த்தியா 


14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி.47 ராக்கெட்டும் வடிவைமைத்து அசத்திய மாணவர்கள் 







 
 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கார்டோசாட்-3 செயற்கைகோள்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                               பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம்  கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் இணைந்து வணிக ரீதியாக அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 நானோ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.  இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மூன்றாம் தலைமுறை நவீன செயற்கைகோள் ஆகும். இது துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும், இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   வண்ண பலூன் பறக்க விட்டு, செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



No comments:

Post a Comment