Tuesday 19 November 2019

தேசிய நூலக வாரவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

 



 தேவகோட்டை - தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
                தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய நூலக வாரவிழா போட்டிகள் நடைபெற்றது.ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை கிளை நூலகர் செந்தில்ராஜா கட்டுரை,கவிதை,பேச்சு போட்டிகளில் முதலிடம் பிடித்த வெற்றி பெற்ற மாணவர்கள் நதியா,ஜோயல் ரொனால்ட்,கீர்த்தியா ஆகியோருக்கு   விருதுகளை வழங்கினார்.அவர் பேசுகையில் ,நூலக வார விழா என்பது பொதுமக்களிடத்தில் நூலகத்தின் தேவையை எடுத்துச் சொல்வதற்கும், மாணவர்களுக்கு நூலகம் ஓர் அறிவுக் களஞ்சியம் என்பதை உணர்த்தவும், அறிவுத்திறனை மேம்படுத்தவும் நடத்தப்படுகிறது. நூலகத்தில், அனைவரையும் உறுப்பினராகவும், புரவலராகவும் தங்களை இணைத்துக் கொள்வதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இத்தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் நூலக அலுவலர் சுரேஷ் காந்தி உட்பட பல பெற்றோர் கலந்துகொண்டனர்.

 

படவிளக்கம் : தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் நூலகர் செந்தில்ராஜா பரிசுகளை வழங்கினார்.அருகில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment