Sunday 17 November 2019

இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா 

பகலில் மட்டுமே பெண் கொசுக்கள் கடிக்க காரணம் என்ன? 
அரசு மருத்துவரின் சுவாரசியமான தகவல் 





 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா நடைபெற்றது.

                     ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார் . தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி பேசுகையில்,  தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளின் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நன்கு கல்வி கற்க முடியும் என்பதற்காக எல்லா பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை தோறும் இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி வருகிறது.  டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசுக்களில் பெண் கொசுக்கள் பகலில் மட்டுமே உணவை சாப்பிடுவதால்  அதிகம் கடிக்கிறது.தனது உற்பத்தி பெருக்கத்தை அதிகப்படுத்த அதிகமான சத்து தேவைப்படுவதால் மனிதனை அதிக அளவில் பெண் கொசுக்கள் கடிக்கிறது.எனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து காய்ச்சலில் இருந்து தடுத்து கொள்ளுங்கள் என்று பேசினார்.நிகழ்வில் செவிலியர் மேரி பங்கேற்றார்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.



No comments:

Post a Comment