Friday 15 November 2019

அறிவியல் சோதனைகள் செய்து கற்றல் 






தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

                                      ஆசிரியை முத்துலெட்சுமி   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  பயிற்சியாளர்கள் பாலாஜி  மற்றும் அரங்குலவன்  ஆகியோர்அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.
மின்னுட்டம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பலூன்கள்களை கொண்டும்,  எல்.ஈ.டி., எல்.சி.டி.,என்பது என்ன என்பது தொடர்பாகவும்,தொடர் இணைப்பு சுற்று,பக்க இணைப்பு ,எளிய மின்சுற்று,அமிலம்,காரம் ,எவ்வாறு பொருள் மின்சாரத்தை கடத்தும் போன்றவற்றை  தெளிவாக விளக்கம் அளித்தனர். மாணவர்கள் அய்யப்பன்,அஜய் பிரகாஷ்,சிரேகா,நதியா,கிருத்திகா உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.அ .மு.மு. மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக
பயிற்சியாளர்கள் பாலாஜி மற்றும் அரங்குலவன்  ஆகியோர்   மாணவர்களுக்கு  நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து  காண்பித்தனர்.




No comments:

Post a Comment