Saturday 9 November 2019

பணம் பிறந்த கதை 
 
பணத்தின் நான்கு வகைகள் என்ன ?
 
புத்தகங்களை  காதலியுங்கள் வெற்றி உறுதி
 
மும்பை வங்கி அதிகாரி மாணவர்களுடன் கலந்துரையாடல்









தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பணம் பிறந்த கதை என்கிற தலைப்பில் பணம் வளர்ந்த தகவல்களை மும்பை வங்கி அதிகாரி விளக்கினார்.
 
 
                     ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் பணம் பிறந்த கதை தொடர்பாக விளக்கினார்.மாணவர்களிடம் அவர் பேசுகையில்,சேமிப்பு எவ்வளவு அவசியமானது என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.இளம் வயதில்   சதுரங்க விளையாட்டு ,ஆங்கிலப் புலமை , புத்தக வாசிப்பு ஆகிய மூன்றுக்கும் நீங்கள் அவசியம் முக்கியத்துவம் தரவேண்டும் ..நான்கு வகையில் பணம் வளர்ந்து வந்துள்ளது..  பண்டமாற்று முறை, ,கமாடிட்டி, , பேப்பர் பணம், நான்காவது பிளாஸ்டிக் மணி . பிளாஸ்டிக் மணி என்பது பிளாஸ்டிக்கால் ஆன பணம் என்று ஒரு வகையிலும் இன்னொரு வகையில் ஏடிஎம் கார்டு , டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக பணம் நாம் வழங்குவது பெற்றுக் கொள்வது போன்றவையும் பிளாஸ்டிக் மணியில் வரும் .தற்போது உள்ள அரசு மொபைல் போன் மூலமாக அதிகமான பணப்பரிவர்த்தனை செய்ய சொல்கிறது .இதனால் பணம் அச்சடிக்க ஆகும் செலவு குறையும் . பணத்தை சேமிக்க வங்கி , உண்டியல் இரண்டுமே அருமையான வழிகளாகும் . இவ்வாறு பேசினார்.மாணவர்கள் நதியா,ஜனஸ்ரீ ,ஜோயல்,அய்யப்பன்,வெங்கட்ராமன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
 
படவிளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பணம் பிறந்த கதை என்கிற தலைப்பில் பணம் வளர்ந்த தகவல்களை மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
 
மேலும் விரிவாக :
 
                      தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பணம் பிறந்த கதை என்கிற தலைப்பில் பணம் வளர்ந்த தகவல்களை மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடிய வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் மாணவர்களிடம் பேசும்போது ,
 
 
 செஸ் விளையாட்டை நன்றாக விளையாடுங்கள் :
     
                   சதுரங்கம் விளையாடினால் மூளை நன்றாக வேலை செய்யும் .யோசிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ல அறிவு வளரும் .சதுரங்கம் விளையாடிய யாரும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தது கிடையாது .நான் ஆறாவது படிக்கும் போதிலிருந்தே புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். புத்தகம் படிப்பது எனக்கு ஒரு காதல் .ஆசையில் அதிகமாக புத்தகங்கள் படித்தேன்நூலகத்தில்  இரண்டு மூன்று உறுப்பினர் அட்டை வைத்திருந்தேன். புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும் .ஆங்கில புலமையை நன்றாக வளர்ந்து கொள்ள வேண்டும் .தினசரி ஆங்கில பேப்பர் 2 பக்கம் படித்து அதில் இரண்டு வார்த்தைகளை தினசரி தெரிந்து கொண்டால் நல்ல புலமை ஆங்கிலத்தில் உங்களுக்கு கிடைக்கும் .தோராயமாக ஒருநாள் இரண்டு வார்த்தை என்றால் ஒரு மாதம் 60 வார்த்தை கற்றுக்கொள்ள முடியும் .ஒருவருடம் 720 வார்த்தை தெரிந்தால் இங்கிலீஷ் மாஸ்டர் ஆகிவிடலாம். வெளிமாநிலங்களில் மட்டுமல்லாமல் உலக மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கிலம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இணைப்பு மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது.
 
    பண்டமாற்று முறை :

                 ஐயாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பணம் இல்லாத காலத்தில் ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளைப் பெறுவது வழக்கத்திலிருந்தது . இதுவும் அவரவர் தேவையைப் பொறுத்து அமைந்தது. பொருளின் மதிப்பு இல்லாமல் போய்விட்டது . கூடுதல் விலை உள்ள பொருளைக் கொடுத்து குறைந்த விலையுள்ள பொருளை வாங்கும் நிலைமை ஏற்பட்டது . அதில் நஷ்டமும் ஏற்பட்டது .அந்த நஷ்டத்தை போக்குவதற்கு வழி தெரியவில்லை .மாதச்சம்பளம் பெரும்பாலான காலத்தில் உப்பு வழங்கப்பட்டது .உப்பைக் கொடுத்து வேண்டிய உணவு பொருள் வாங்க வேண்டும் .அரசர்கள் காலத்தில் இதைவிட மோசமான முறை உள்ளது. எனவே தங்கம் வெள்ளி உருக்கி  காயினாக பயன்படுத்தப்பட்டது .
 
 பணம் வந்த வழி :
 
            நாளடைவில் சீனா  தான் முதன் முதலில் பேப்பர் பணம்  கண்டுபிடித்தது .அதற்கடுத்த பிரஞ்சு பிறகு இந்தியா என இப்படியே பணம் ஒவ்வொரு நாடாகப் வரத்  தொடங்கியது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் பேப்பர் பணம்  கண்டுபிடிக்கப்பட்டது .அதிலும் சில நாடுகள் பணம் கிழிந்து விடும் நிலைமை ஏற்பட்டதால் பிளாஸ்டிக் மணி கண்டுபிடித்தது. நான்கு வகையில் பணம் வளர்ந்த கதையாகும்.  பண்டமாற்று முறை, ,கமாடிட்டி, , பேப்பர் பணம், நான்காவது பிளாஸ்டிக் மணி . பிளாஸ்டிக் மணி என்பது பிளாஸ்டிக்கால் ஆன பணம் என்று ஒரு வகையிலும் இன்னொரு வகையில் ஏடிஎம் கார்டு , டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக பணம் நாம் வழங்குவது பெற்றுக் கொள்வது போன்றவையும் பிளாஸ்டிக் மணியில் வரும் .தற்போது உள்ள அரசு மொபைல் போன் மூலமாக அதிகமான பணப்பரிவர்த்தனை செய்ய சொல்கிறது .இதனால் பணம் அச்சடிக்க ஆகும் செலவு குறையும் . அரசாங்கத்திற்கே பணம் அச்சடிப்பதை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .
 
பணம் சேமிக்க எளிமையான வழிகள் :
 
                பணத்தை சேமிக்க வங்கி , உண்டியல் இரண்டுமே அருமையான வழிகளாகும் . தமிழ் மொழி அச்சடித்த பணம் சிங்கப்பூர் ,மொரீசியஸ் ,மலேசியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் உள்ளது தமிழ் மொழிக்கு நல்ல மரியாதை உள்ளது, பணவீக்கம் என்பது உங்கள் அப்பா காலத்தில் சாதாரணமாகஇட்லி  10 பைசாவுக்கு வாங்கியிருப்பார் .அவருக்கு அப்பொழுது சம்பளம் ரூபாய் 100 இருந்திருக்கலாம் .ஆனால் இப்பொழுது இட்லி ரூபாய் மூன்று வாங்குகிறோம் . இதுதான் சிம்பிளாக பணவீக்கம் பொருள் விலையை இழந்து மதிப்பை இறக்கும்போது பண வீக்கம் ஏற்படலாம். பணம் அச்சடிக்க தனித்தாள் உள்ளது .பிரின்டிங் பிரஸ் நாசிக்கில் மட்டுமே அடிக்க முடியும் .பிறகு டெல்லியில் உள்ளது. .ரிசர்வ் வங்கி மட்டும்தான் அச்சடிக்க முடியும் . நீங்கள் அச்சடிக்க  முடியாது . பணத்தில் காந்தியின் உருவம்  அச்சடிக்க காரணம் நம் நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தூய ஆத்மா என்பதால் அவரது உருவம் அச்சடிக்கப்பட்டு  உள்ளது .
 
 
பிளாஸடிக் பணத்தின் அவசியம் :

                                     பணம் ஏன் வந்தது என்றால் பண்டமாற்று முறையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி படுத்துவதற்காகவே பணம் என்ற ஒன்று வந்ததாக எடுத்துக்கொள்ளலாம் .இன்னும் எட்டு அல்லது பத்து வருடங்கள் நீங்கள் படித்து வேலைக்கு வரும்பொழுது முற்றிலுமாக பணம் ஓரளவு குறைக்கப்பட்டு அனைத்துமே பிளாஸ்டிக் அல்லது டிஜிட்டல் மணி வழியாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது .வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் முதலாவதாக புத்தகங்களை அதிகமாக படியுங்கள் .செஸ் விளையாட்டை அதிகமாக விளையாடுங்கள் .மூன்றாவதாக ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ளுங்கள் .
 
உண்டியல் சேமிப்பின் அவசியம் :

              நான் படிக்கும் காலங்களில் எல்லாம் எங்களுக்கு வங்கியிலிருந்து உண்டியல் கொடுப்பார்கள் .அந்த உண்டியலின்  சாவியை வங்கியில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் முதல் சில காசுகளை  நாங்கள் அந்த உண்டியலில் சேமிப்போம். அந்த உண்டியலை மாத கடைசியில் , இரண்டு மாத கடைசியில் கொண்டு சென்று வங்கிகளில்  கொடுத்தால் அவர்கள் அந்த சாவியை எடுத்து பணத்தை சேமித்து எங்களுடைய அக்கவுண்டில் வைத்துக்கொள்வார்கள் .அதுபோன்றுதான் சேமிப்பு பழக்கம் எங்களுக்கு வந்தது .பள்ளியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் சேமித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கல்வி அறிவை அதிகமாக பெற்றுக் கொள்ளுங்கள் புத்தகத்தை நன்றாக வாசியுங்கள் நிச்சயமாக வெற்றி உங்கள் பக்கமாக உள்ளது.என்று பேசினார்.

No comments:

Post a Comment