Sunday 24 November 2019

திசைகள் போன்ற சமுதாய அமைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள் 

சமுதாயத்தின் வெற்றிக்கு காரணம் ஆசிரியர்களே - திசைகள் தலைவர் பெருமிதம்

திசைகள் உடன் விருந்தோம்பல்






                       நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்புடன் என்னுடைய தொடர்பு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நல்ல முறையில் தொடர் இணைப்பில் இருந்து வருகிறேன் . திசைகளின் தலைவர் மருத்துவர் . தெட்ணாமூர்த்தி அவர்களும் , பொருளாளர் முபாரக் அவர்களும் மற்ற நண்பர்கள் அனைவரும் மிகுந்த அளவில் எனக்கு ஊக்கமும் உந்து சக்தியும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு சமுதாய அமைப்பின் மூலம் நமக்கு கிடைக்கும் உந்து சக்தியானது மிகப்பெரிய அளவில் நாம் இன்னும் செயல்களை செய்வதற்கு வாய்ப்பாக அமைகிறது என்பதே உண்மை . கடந்த வாரத்தில் எனது பிறந்த தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு நண்பர்களுக்காக ஒரு சிறு விருந்தோம்பல் அறந்தாங்கியில் நேற்று KL ஷூ பார்க்கில் நடைபெற்றது. 

ஆட்டோ ஓட்டுனருக்கும் உந்து சக்தியாக அமைந்த பள்ளிக்கூடம் :

                                ஏராளமான திசைகள் நண்பர்கள் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .என்னுடைய அழைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல்வேறு பணிகளுக்கிடையில் அவர்களது குடும்பத்தினருடன் அனுமதியுடன் என்னுடைய நிகழ்விற்கு வந்து இருந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த விதம் இன்னும் அதிகமான உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். திசைகள் பொருளாளர் திரு. முபாரக் அவர்கள் , காசிவிசுவநாதன் அவர்கள் ,திரு அண்ணாதுரை அவர்கள்,
நல்லாசிரியர்  திரு பாஸ்கர் அவர்கள் , ஆசிரியர் திரு சுரேஷ் அவர்கள், நண்பர்களது  குழந்தைகள் என இன்னும் பலர்  எனக்கு மிகப்பெரிய அளவில் என்னுடைய பணி தொடர்பான தகவல்களை எங்களிடத்தில் பேசி அது தொடர்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பில் இருக்கக்கூடிய நண்பர்கள் போல் இருப்பவர்களின் எண்ண அலைகளின் காரணமாக தான் நம்மால் இதுபோன்று இன்னும் நல்ல செயல்களை செய்ய முடிகிறது.திசைகளின் தலைவர் மருத்துவர். தட்சணாமூர்த்தி அவர்கள் பேசுகையில் ஆட்டோ ஓட்டும் ஒருவருக்கும் நம் பள்ளியின் செயல்பாடு மிகப்பெரிய அளவில் உந்துசக்தி ஏற்படுத்துகிறது .மருத்துவராகிய தனக்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இந்த பள்ளியின் செயல்பாடுகள் ஏற்படுத்துகிறது .தனது பள்ளி பருவத்தில் சத்தியமூர்த்தி பள்ளியில் முனியசாமி என்கிற ஆசிரியர் எந்த நேரமும் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்ததன் காரணமாகவே தான் இந்த நிலையை அடைய முடிந்ததாக தெரிவித்தார்.அதுவும் அவரது குழந்தைகளுடன் கூட நேரம் ஒதுக்க நேரம் இல்லாமல் பள்ளி மாணவர்களுக்காகவே உழைத்த நிகழ்வை எண்ணி போற்றினர்.இதுவே சமுதாயத்தின் வெற்றி ஆகும்.


பெற்றோர்- ஆசிரியர் யார் ? விளக்கம் அளித்த பள்ளி தாளாளர் 

                           அதேபோன்று ஆசிரியர்கள் பேசும் போது நாமும் இதுபோன்ற செயல்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் . எவர்கிரீன் பள்ளியின் திரு முபாரக் அலி அவர்கள் பேசும்பொழுது, ஆசிரியர் யார் பெற்றோர் யார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் பெற்றுக் கொடுத்தவர்களுடன் அவர்களை ஆசிர்வதிப்பவர்கள்தான் . ஆசிரியர் என்கிற கருத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் .மிகவும் பிடித்திருந்தது .திரு.தக்ஷிணாமூர்த்தி அவர்கள் பேசும்பொழுது இன்னும் பல்வேறு விஷயங்களை அது தொடர்பான பள்ளி தொடர்பான தகவல்களை கூறி மிகவும் மகிழ்ந்தார்.வங்கி மேலாளர் காசிவிசுவநாதன் அவர்கள் பேசும்பொழுது வங்கி தொடர்பான தகவல்களையும் பள்ளியில் நடைபெறும் பல்வேறு தகவல்களையும் எடுத்துரைத்தார் .ஆசிரியர் திரு சுரேஷ்ராஜ்  அவர்கள் பேசும்பொழுது வங்கியில் செல்லான் எப்படி பூர்த்தி செய்வது என்பதை மிகத் தெளிவாக சொல்லிக் கொடுத்த விதம் பற்றி கூறினார் .திரு.அப்துல்பாரி அவர்கள் பேசும்பொழுது எங்கள் பள்ளிக்கு வந்து இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார் .ஃபீட்பேக் சொல்வதற்காக நாம் அழைக்கும் பொழுது உடனடியாக ஒரு மாணவர் வர சிரமப்படும் நிலையில் பல்வேறு மாணவர்கள் தானாக வந்து பேசியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தியதாக தெரிவித்தார் .

ஆவணப்படுத்துதல் ஆர்வத்தை ஏற்படுத்திய பள்ளி :


                  திசைகள் மின்னிதழின் ஆசிரியர் அண்ணாதுரை அவர்கள் பேசும்பொழுது எங்கள் பள்ளியில் நாங்கள் ஆவணப்படுத்தி உள்ள பல்வேறு தகவல்கள் திசைகள் குழுவுக்கும் மிகப்பெரிய ஒரு மோட்டிவேஷன் ஏற்படுத்தியதாக தெரிவித்தார் . அதன் தொடர்ச்சியாகத்தான் திசைகள் மின்னிதழ் தொடர்ந்து பல்வேறு விஷயங்களை ஆவணப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் .

பள்ளியின் வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பே காரணம் :

                   இதுபோன்ற தகவல்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள்,எனது  குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் நாம் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்து செய்ய முடிகிறது என்கிற தகவலை என்னுடைய ஏற்புரையின்போது  தெரிவித்தேன் . பல்வேறு நிகழ்வுகளுக்கு இடையில் எங்களுடைய பள்ளியின் நிகழ்வுகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் காரணம் என்கிற தகவலையும் தெரிவித்தேன். இதுபோன்று தொடர்ந்து நிகழ்வுகள் பள்ளியில்  நடத்துவதற்கு திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பினர் போன்று பல்வேறு நபர்களின் உடைய தொடர்புகள் இருப்பதையும் வெளிப்படுத்தினேன் .எவர்கிரீன் பள்ளியின் முபாரக் அவர்கள் பேசுகையில் என்னுடைய பதிவுகள் அனைத்தையும் பார்த்து விடுவதாகவும் கூறினார்கள் . மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது . இதுபோன்று பாராட்டும் செயல்பாடும் ஒருவருடைய பணியை அங்கீகரிக்கும் செயல்பாடும் இன்றைய காலகட்டத்தில் ஒரு மிகப் பெரிய விஷயமாகவே இருக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை வேளையில் பல்வேறு பணிகளுக்கிடையில் பெருவாரியான திசைகள் நண்பர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து திசைகளில் பயணிப்போம். தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெறுவோம் .

பங்குபெற்றோர்க்கு நன்றி :

                              நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்த எவர்கிரீன் பள்ளியின் தாளாளர் முபாரக் அலி ,வங்கி மேலாளர் காசிவிசுவநாதன், நிலா பேன்சி ஸ்டோர் அப்துல்கரீம் ,சகானா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் அப்துல் ரஹீம், கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரியின் தாளாளர் அப்துல் பாரி ,ஓவியர் அய்யப்பன் ,நல்லாசிரியர்கள் பாஸ்கரன் ,சுரேஷ்ராஜ் , ரகுமான் அண்ட் கோவின் உரிமையாளர் ஜாகிர் உசேன் , KL ஷூ மார்ட் உரிமையாளர் ஷேக் அப்துல்லா,  தாஜ் ராஜ் அரசி மண்டியின் உரிமையாளர் தாஜ் ,ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் விஜய், எல்ஐசி முகவர் விஜயகுமார் ,சுந்தரம்,எம்ஆர்டி பழமுதிர்சோலை உரிமையாளர் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி :

                  மேலும் பல ஊர்களில் இருந்தும் பல்வேறு வகைகளில் ஆதரவினையும் வாழ்த்துகளையும் தெரிவித்த திசைகள் அமைப்பினருக்கும் மிகுந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் .திசைகளின் சார்பாக எனக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .அனைத்து வகையான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்த  திசைகளின் பொருளாளர்  முபாரக் அவர்களுக்கும் ,  தலைவர் தட்சிணாமூர்த்திக்கும் இன்னும் பலருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.



மட்டற்ற மகிழ்ச்சி,சிறப்பான தலைமை,சிறப்பான ஏற்பாடுகள் 

          திசைகள் விருந்தோம்பல் நிகழ்விற்கு கடந்த வாரமே வருவதாக சொல்லி இருந்தேன். அப்பொழுது திசைகளை தலைவர் தட்சிணாமூர்த்தி அவர்களிடம் பேசும் பொழுது,  ரோட்டரி சார்பாக திசைகளுக்கு பாராட்டு விழா இருப்பதால் நீங்கள் அதற்கு அடுத்த வாரம் வாருங்கள் என்று என்னிடம் அன்பாக தெரிவித்தார்கள் .அதே கருத்தை பொருளாளர் முபாரக் அவர்கள் தெரிவித்தார்கள் .அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று இந்த நிகழ்வு மிக சிறப்பாக நடந்தேறியது தக்ஷிணாமூர்த்தி அவர்கள் பேசும்பொழுது முபாரக் அவர்களைத் தொடர்ந்து தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள் . அவர்கள் நீங்கள் அளிக்கும் விருந்தோம்பல் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார் என்று தெரிவித்தார்கள் . திரு .முபாரக் அவர்களும் எத்தனை முறை போனில் அழைத்தாலும் அத்தனை முறை போனை எடுத்துப் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் மிக அருமையாக செய்திருந்தார்கள் . கரீம்  அவர்களும் அவர்களுடன் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக என்னிடம் தெரிவித்தார் .

திசைகள் தலைவர்,பொருளாளர்,அப்துல் கரீம் ஆகியோருக்கு சிறப்பு நன்றி : 

                        எல்லா நிகழ்வும் மிக அருமையாக அனைவருக்கும் அனைத்து விதமான விஷயங்களும் போய் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைவதற்கு பல நண்பர்களின் உதவிகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது என்றே கூறலாம் .மீண்டும் ஒருமுறை வந்திருந்த அனைவருக்கும் ஏற்பாடு செய்த அனைவருக்கும் இடத்தை அளித்த எம்ஆர்டி ப்ரூட்ஸ் உரிமையாளர் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை இருகரம் கூப்பி தெரிவித்துக்கொள்கிறேன். வர இயலாமல் வாழ்த்துக்கள் சொன்ன நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653




No comments:

Post a Comment