Sunday 2 June 2019

 நன்றி 
ஆசிரியை யாஸ்மின் ராணி அவர்கள் ,

 
 
அறந்தாங்கியிலிருந்து திசைகள் குழு சார்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு  நேரில் வருகை தந்து பள்ளியை பார்வையிட்டு ,மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி பற்றியும்,மாணவர்கள் செயல்பாடுகள் தொடர்பாகவும் எழுதிய எண்ணங்களை,  பள்ளி தொடர்பாக நிறைய செய்தி இதில் உண்டென்பதால், மகிழ்வுடன் பகிர்கிறேன்..இனிமேல் அவரது வார்த்தைகளில் ,
 
 
 
உண்மையில் நேரில் பார்த்து வியந்த மனிதர் 
*திரு.சொக்கலிங்கம் சார்*
 பள்ளிச்செயல்பாடுகளை மிகவும் துல்லியமாக 22 Records (Spiral binding ) பார்த்ததில், பல்வேறு பத்திரிக்கைகளில் ஆசிரியர்கள் மட்டுமல்ல மாணவர்களும் எழுத்தாளர்களாக, ஓவியர்களாக................ இன்னும் பல...
அதிசயித்துப் போனோம்.

இந்த கல்வியாண்டில் இராமேஸ்வரம் சுற்றுலா சென்றோம் .ஆனால் வரும் கல்வியாண்டில் நிச்சயமாக எங்கள் பள்ளியின் பயணம் தேவகோட்டை மாணிக்கவாசகம் சேர்மன் நடுநிலைப்பள்ளி தான்..

விழாவில் வரவேற்புரை முதல் நன்றியுரை வரை நடந்த நிகழ்வுகளை அப்படியே உள்வாங்கி விழா முடிந்ததும் அவற்றை ஒவ்வொரு மாணவர்களாக தொகுத்து கூறியது மிகவும் பிரமிப்படைய செய்தது.

ஒரு பள்ளியில் உள்ள சாதனை மாணவர்கள் சிலரை கண்டதுண்டு. ஆனால் பள்ளியில் உள்ள ஒட்டு மொத்த மாணவர்களும் சாதனையாளராக இந்த பள்ளியில்தான் கண்டிருக்கிறோம்...

விழா நடைபெற்று கொண்டிருக்கும் சமயம், மாணவர்கள் குறிப்புகள் எடுத்துக்கொண்ட விதம்  பாராட்டப்பட வேண்டிய விஷயம்..விழாவின் இறுதியில் அம்மாணவர்கள் கூறிய Feedback அனைவரையும் வியக்க வைத்தது.

No comments:

Post a Comment