Monday 17 June 2019

துப்புரவு தொழிலாளியின் மகன் மைக்ரோ கணினி வெளியிட்டு சாதனை

 2,500 ரூபாயில் மைக்ரோ கணினி :

இலவச ரோபோ பயிற்சி


 ரோபோவை ஒட்டி பார்த்து மகிழ்ந்த மாணவர்கள் 


மனிதனால் செல்ல இயலாத இடத்துக்கும்   சென்று வேலை செய்ய கூடியவை   ரோபோக்கள்

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு 

மைக்ரோ  கணினி வெளியீட்டு விழா 










தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச ரோபோ பயிற்சி வழக்கப்பட்டது.
                                                          பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார். திண்டிவனம் அருகே உள்ள கீழ் சித்தாமூர் கிராமத்தை சார்ந்த தேசிய மற்றும் சர்வேதச விருதாளர் அன்பு.கெனித் ராஜ் என்கிற ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலார் தானே தயாரித்த மைக்ரோ கணினியை வெளியிட அதனை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் பெற்று கொண்டார்.துணைவேந்தர் தலைமை தாங்கி பேசுகையில்,மனிதனால் செல்ல இயலாத இடத்துக்கும்   சென்று வேலை செய்ய கூடியவை   ரோபோக்கள்.1920ம் ஆண்டில் செக்கோஸ்லாவியா நாட்டை சேர்ந்தவர் ரோபோட் என்கிற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தினார் .நாம் எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதை விட நம்முடைய செயல்பாடுதான் முக்கியம்.இந்த பள்ளி மிகச்சிறப்பு பெற்ற பள்ளியாக விளங்குகிறது.இங்குள்ள மாணவர்களுக்கு பல்வேறு திறன்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இவர்கள் மிகப்பெரிய ஆளுமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள் இவ்வாறு பேசினார்.சென்னை ரோபோ அறிவியலார் முருகப்பெருமாள்  மாணவர்களுக்கு ரோபோ செய்வது தொடர்பான பயிற்சி வழங்கினார்.மாணவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.துணைவேந்தரின் உதவியாளர் சேகரன் ,காளையார்கோவில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்  சேவற்கொடியான் உட்பட பெற்றோர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.மாணவர்கள் சங்கரி,நதியா,கீர்த்தியா,ஜனஸ்ரீ ,சபரி,அய்யப்பன் உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

  2,500 ரூபாயில் மைக்ரோ கணினி :
                          மிகக்குறைந்த விலையில் சி.பி.யு இல்லாமல் குறைந்த எடையில் தான் கண்டுபிடுத்துள்ள மைக்ரோ கணினி தொடர்பாக கெனித் ராஜ் கூறியதாவது :

           இந்த மைக்ரோ கணினியானது மிகச்சிறிய வடிவில் அதிக செயல்திறன் கொண்டது.இதை இணைப்பதற்கு ஒருஎல்.சி.டி./எல்.ஈ.டி.மானிட்டர் அல்லது டிவி மட்டும் போதுமானது.ஹச்.டி.எம்.ஐ.கேபிள் மூலம்எல்.சி.டி. திரையுடன் இந்த மைக்ரோ கணினியை இணைக்கலாம்.வேறு எதுவும் கூடுதலாக இணைக்க தேவை இல்லை.மதர் போர்டு,ரேம்,ப்ராஸ்ஸ்ஸர் , ஹார்ட் டிஸ்க்,எஸ்.எம்.பி.எஸ் சேர்ந்த ஒரு மொத்த சி.பி.யு விற்கு பதிலாக நாம் இந்த மைக்ரோ கணினியை உபயோகிக்கலாம்.மேலும் வைஃபை ,புளுடூத் போன்றவையும் இதனுள் இருக்கிறது...
தற்போது ரெஸ்பெரி பை  இயங்குதளத்தில் செயல்படும்.. கூடிய விரைவில் இதன் விண்டோஸ் இயங்குதளம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
ஒருமைக்ரோ  கணினியின் அதிக பட்ச விலை 2500ரூபாய்....மட்டுமே என்று கூறினார்.



பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச ரோபோ பயிற்சியில் திண்டிவனம் அருகே உள்ள கீழ் சித்தாமூர் கிராமத்தை சார்ந்த தேசிய மற்றும் சர்வேதச விருதாளர் அன்பு.கெனித் ராஜ் என்கிற ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலார் தானே தயாரித்த மைக்ரோ கணினியை வெளியிட அதனை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் பெற்று கொண்டார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.


மேலும் விரிவாக : 

துப்புரவு தொழிலாளியின் மகன் மைக்ரோ கணினி வெளியிட்டு சாதனை
                        மைக்ரோ கணினியை கண்டுபிடித்து ,ரோபோடிக்ஸ் துறையில் விருது பெற்றுள்ள விஞ்ஞானி கெனித் ராஜ் தமிழ் வழி கல்வியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது தந்தையர் சென்னையில் கால்வாய் சுத்தம் செய்யும் துப்பரவு தொழிலாளி ஆவார் .இதன் காரணமாக சாக்கடை அள்ளும்போது தனது தந்தையுடன் பணியில் உள்ள பலர் வாயு தாக்கி இறந்துபோவது பார்த்து விஷவாயு கண்டறியும் கருவி கண்டுபிடித்துள்ளார்.துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் முன்பாக, இக்கருவியை உள்ளே செலுத்தினால் உயிரைப் பறிக்கக்கூடிய விஷவாயுக்களான ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் அதிக அளவு இருந்தால், எச்சரிக்கை மணி எழுப்பி உஷார் செய்யும். இதனால், சாக்கடைக்குள் இறங்காமல் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் கென்னித் ராஜ்.இது மட்டுமல்ல பெண்கள், குழந்தைகள், மீனவர்களுக்கு பயன்படக்கூடிய  வகையில்  உருவாக்கியுள்ள ஜிபிஎஸ் கருவி இணைய உதவி இல்லாமலே செயல்படக்கூடியது என்பது அதன் சிறப்பம்சம். அனுமதிக்கப்பட்ட அதிர்வெண்களில் செயல்படக்கூடியது. இதற்கு சாதாரணமாக குறுந்தகவல் அனுப்பினால் போதும்; இந்த ஜிபிஎஸ்ஸை வைத்திருப்பவர் இருக்கும் இடம் கூகுள் மேப் லிங்காக குறுந்தகவலில் வந்துவிடுகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விளிம்புநிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸை கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.


மாணவர்களின் கேள்விகளும் கெனித்  ராஜ் பதில்களும் :

கீர்த்தியா : உங்களை பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : எங்கள் ஊரில் நான் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தேன்.எங்கள் ஊரில் விவசாயம் பொய்த்து போனதால் வேலை தேடி எனது அப்பா பிழைப்புக்காக எங்களை  சென்னை அழைத்து வந்தார்..என்னுடைய அப்பா சாக்கடை அள்ளும் தொழில் செய்பவர்.நான் அரசு பள்ளியில் படித்து இன்று சாதனையாளராக மாறி உள்ளேன்.எனவே நீங்களும் மனது வைத்தால் சாதனையாளராக வருவீர்கள்.நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.உங்களுக்குள் ஒரு குறிக்கோள் வைத்து கொள்ளுங்கள்.மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள்.மைக்ரோ சிப் இருந்தால் இன்று அனைத்தும் சாதனை தான்.

ஐயப்பன் : ரோபோ எதை கொண்டு தயாரிக்கப்டுகிறது ?

பதில் : சிலிக்கானை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ஜனஸ்ரீ : ரோபோவின் அர்த்தம் என்ன ?

பதில் : சர்வன்ட் என்று பொருள் .

சிரேகா : ரோபோ இறந்துவிட்டால் திரும்ப உருவாக்க முடியுமா /

பதில் : மீண்டும் உருவாக்க முடியும்.அனைத்துமே கோடிங்தான்.

கோட்டையன் : ரோபோவை உருவாக்க எத்துணை நாட்கள் ஆகும் ?

பதில் : அந்தந்த ரோபோவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கும் நாட்கள் தேவைப்படும்.ஒரு சில ரோபோக்களை சில மணி நேரத்தில் தயாரிக்கலாம்,சில நாட்கள் ஆகலாம்,சில மாதங்கள் ஆகலாம்.

அஜய் பிரகாஷ் : ரோபோ எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

பதில் : 1940ம் ஆண்டுக்கு பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது.

வெங்கட்ராமன் : ரோபோவின் விரிவாக்கம் என்ன ?

பதில் : இது ஒரு புனை பெயர்.இதற்கு என்று விரிவாக்கம் கிடையாது.

திவ்யதர்ஷினி : தற்போது ரோபோ அதிகமாக பயன்படுத்தக்கூடிய நாடு எது ?

பதில் : சீனா மற்றும் ஜெர்மனி

ஸ்வேதா : இதுவரைக்கும் எத்துணை ரோபோட் உருவாக்கி இருக்கீங்க ?

பதில் : 13 ரோபோட் உருவாக்கி உள்ளேன்.

ஆகாஷ் :உங்களது லட்சியம் என்ன?

பதில் : விவசாயிகளுக்கான அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.

கீர்த்திகா : எந்திரன் படத்தில் இருக்கக்கூடிய ரோபோட் மனதின் போல இருக்கிறது.அது உண்மையா ?

பதில் : அவை செயற்கையாக உருவாக்கப்பட்டது.உன்னை அடித்தால் திருப்பி அடி என்று அதில் எழுதப்பட்டிருக்கும்.அதன்படி அது செயல்படும்.


நதியா : ஒரு முறை தயாரித்த ரோபோ எத்துணை ஆண்டுகள் அப்படியே இருக்கும்?

பதில் : சுமார் 4000 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.

இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.






அன்பு கெனித் ராஜ் அவர்களுடன்  பேட்டி.!
 
1. உங்கள் வெற்றி என்று நீங்கள் எதை கொண்டாடுகிறீர்கள்?

சமத்துவமான சமூகம்.! (பொட்டில் அடித்தாற்போல சொல்கிறார்). என்னுடைய வெற்றி எப்படி
இருக்கவேண்டும் என்றால், எப்பொழுது தொழில்நுட்பத்தால் ராக்கெட், செயற்கைக்கோள்கள் மட்டுமே
அனுப்ப முடியும், ரோபோட் மட்டும்தான் உருவாக்க முடியும் என்ற நிலை மாறி, இங்குள்ள அடிப்படை
மக்களின் தேவைகளை இந்த தொழில்நுட்பம் பூர்த்தி செய்கிறதோ அப்பொழுதுதான் தொழில்நுட்பம்
வெற்றி அடைந்ததாக எண்ணுவேன். என்னுடைய வெற்றியும் அதுதான்.
இன்னும் சொல்லவேண்டும் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி ஆடம்பரமான விடையங்களுக்கு மட்டுமே
போய்ச்சேராமல் அத்தியாவசியமான பொருட்களுக்கும் சென்றடைந்து அதின்மூலம் மக்கள் பயனடைந்தால்
அதுவே எனக்கான வெற்றியாக கருதுவேன்.

2. ரோபோடிக் துறையில் எதிர்கால வளர்ச்சி என்ன?

எதிர்கால வளர்ச்சி என்பது தற்சமயம் முன்னேறி வரும் Artificial Intelligent பற்றியதாக இருக்கும். ஆனால்
தற்சமயம் உள்ள முன்னேற்றம் நாம் நினைப்பதுபோல Artificial Intelligent அல்ல. அது மனிதர்களால்
வரையறுக்கப்பட்ட Pre Programmed தான். எனவே ரோபோட்கள் சுயமாக சிந்திப்பதில்லை.
ஆனால் இக்குறையை போக்கும் வகையில் தற்பொழுது Machine Language மூலமாக Real Artificial Intelligent
படைக்கும் நோக்கில் Cloud computing எனும் Technology-யை Artificial Intelligent-குள் கொண்டுவருவதே
ரோபோடிக் துறையில் எதிர்கால வளர்ச்சியாய் இருக்கும். அதின் பின் ரோபோட்கள் சுயமாக சிந்தித்து
முடிவெடுக்கும் திறனுடன் இருக்கும். (மாமனிதனுக்கும் அப்பாற்பட்ட சக்தியாய் உருவெடுக்கும் என்கிறார்)

3.சமீப காலங்களில் ரோபோட்டிக் துறை சார்ந்து அதிகரித்துள்ள பயன்பாடு எந்தத் துறையில்..?

மருத்துவ துறையில். எப்படியெனில் மிக நுண்ணிய அறுவை சிசிகிச்சை செய்ய Robotic Arm மற்றும் அதின்
அறுவை சிகிச்சை வழிமுறையும் மிக உபயோகமுள்ளதாய் இருக்கிறது. மனிதர்களை விட திறன்வாய்ந்ததாய்
ரோபோட்டிக் நுட்பம் செயல்படுகிறதால் சிக்கலான உடலியல் பிரச்சினைகளை திறம்பட களைவதன்
வாயிலாக உயிர் இழப்புகளின் எண்ணிக்கை குறைகிறது.
சமீப காலங்களில் Cancer, Diabetes போன்ற பிரச்சினைகளுக்கும் Analysis செய்வதற்கும் தரவுகளை
பதிவுசெய்வதற்கும் ரோபோடிக் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

4. சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மூழ்கி கிடக்கிறார்கள் என்று பார்ப்பதை தவிர்த்து, இங்கு பல நல்ல விடயங்களை, தேவையான செய்திகளை,
உடனடியாக பகிர்ந்து மற்றவர்களுக்கும் அறியத்தருகிறார்கள் என்பதும் குறிப்பிட தக்கது. சமூக
வலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் இல்லாவிடில் ‘பொள்ளாச்சியில் நடந்த சம்பவமோ,
வேதாந்தா பிரச்சினைகளோ’ பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்க முடியாதே.!
இவ்வளவு ஏன்.. இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் முழுநாள் கடையடைப்பு நடந்ததை எந்த
தொலைக்காட்சி ஊடகமும் மக்களுக்கு சொல்லவில்லை. ஆக, என்ன காரணத்திற்காக இளைய சமுதாயம்
சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கிறது என ஆராய்தல் நலமாய் இருக்கும். எல்லோரும் வரும்
செய்திகளை வெறுமனே பகிர்வது மட்டுமல்ல. நமக்கு செய்தித்தாள், தொலைக்காட்சி சொல்லாத பல
செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களே மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.



5. நீங்கள் கண்டு வியந்த உங்கள் துறை சாராத மற்ற துறை எது? அதற்கான முக்கிய காரணம் எது?

சிற்ப வேலைகள், ஓவிய துறைகளை எண்ணி வியப்பேன். பழங்கால சிலைகளை வடிவமைத்தது நம்
கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கிறது. குறிப்பாக தஞ்சை பெரியகொவிலில் உள்ள யாழியின் வாய்
உள்ளே செதுக்கி வைக்கப்பட்ட உருண்டைக்கல் (உருளும். ஆனால் வெளியே எடுக்க இயலாது) வடிவம் மிக
நுட்பமான வேலைப்பாடு என்பதே சான்று.

6. நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகளை வாழ்வியலை ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் மூலம்
மீட்டெடுக்க அல்லது புத்தாக்கம் செய்ய வழி உள்ளதா?

       நிச்சயமாய் இருக்கிறது. (கேட்கவே சந்தோசமாக இருக்கிறதல்லவா?) அதற்கான முயற்ச்சிகளில் நான்
இருக்கிறேன். பாரம்பரிய விவசாய முறைகளை கடைபிடிக்கும் முன்பு அடுக்கு விவசாயமுறை எனும்
கோட்பாட்டை வரையறை செய்துகொண்டு இருக்கிறேன். சுருக்கமாக கூறவேண்டுமெனில், விவசாயிக்கு
தேவையான தரவுகளை பிழையின்றி கொடுக்கும் முறை. குறிப்பிட்ட விவசாய நிலப்பகுதியின் தட்பவெப்ப
நிலை, எதிபர்க்கப்படும் மழை அளவு, அதினால் அந்த குறிப்பிட்ட நிலம் பெறப்போகும் மழைநீர் என்று இந்த
ஆய்வு விரியும். அது சம்பந்தப்பட்ட தகவல்கள் தரும் செயற்கைக்கோள் வடிவமைப்பை உருவாக்கும் திட்டம்
துவங்கியுள்ளேன். பாரம்பரிய விவசாயம் காக்க என்னால் இயன்ற ஒரு முன்னெடுப்பு இது. விவசாயத்தை
காக்கவேண்டும் எனும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும்.

7. தமிழகத்தின் பாடத்திட்டத்தில் ரோபோட்டிக் துறையை புரிந்து கொள்ளும் அளவிற்கு அடித்தளக்
கட்டமைப்பு உள்ளதா?

      இப்பொழுது உள்ள பாடத்திட்டம், அது உயர்கல்வியோ அல்லது பொறியியளாகவோ இருக்கட்டும், அது
முப்பதிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்புள்ள பாடத்திட்டம். இப்பொழுது சமச்சீர் கல்வியில்
கொண்டுவந்த சில மாற்றங்கள் நல்லதுதான்.
அது தவிர்த்து பார்த்தோமானால், இப்பொழுது இருக்கும் பாடத்திட்டத்தை வைத்து மேலதிக
தொழில்நுட்பங்களை புரிந்துகொள்வது சற்று கடினம்தான். ஏனெனில் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்கள்
இருக்க, அதின் மூலங்களை மட்டுமே இப்போதைக்கு பாடத்திட்டங்கள் சொல்லித்தருகின்றன. பல
மாற்றங்கள் தேவை பாடத்திட்டங்களில்.

8. அனைத்து துறைகள் சார்ந்த பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் தான். அவர்களின்
எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?

நாம் ஏன் வேலை கிடைக்கவேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறோம் என புரியவில்லை.
வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்ததாலோ என்னவோ, ஒரு கம்பெனியில் வேலை செய்வதையே
மரியாதை என்று நினைத்துவிட்டோம் போல. சுயதொழில் செய்யும் எண்ணம் வளர வேண்டும். அதை
ஊக்கப்படுத்தவும் இந்த சமூகம் விரும்புவதில்லை. அதை இந்த கல்விமுறையும் பெரும்பாலும் தருவதில்லை.
அவர்கள் வேலை தேடும்படியே இருந்தால் உறுதியான வேலைவாய்ப்பு என்பது சாத்தியமில்லை.
வேலையை உருவாகுபவர்களாய் இருந்தால் நிச்சயமாய் பிரகாசமான எதிர்காலம் உண்டு. ஆனால் அதற்கான
நேரத்தையும் ஆதரவையும் அவர்களின் குடும்பமும், இந்த சமூகமும் கொடுக்கவேண்டும். முக்கியமாக நம்
கல்விமுறைகளும் பாடத்திட்டங்களும் அதற்கேற்றவண்ணம் மாறவேண்டும்.

9. உங்களது சமீபத்திய கண்டுபிடிப்பு பற்றி அல்லது சமீபத்திய ப்ராஜெக்ட் பற்றி விளக்குங்களேன்?

விஷவாயு  போன்ற கண்டுபிடிப்புகள் தவிர ஏற்கனவே குறிப்பிட்ட விவசாயம் சார்ந்த
செயற்கைக்கோள்தான். ஒரு ஏக்கர் (ஆமாம்.. ஒரு ஏக்கரரேதான்) நிலப்பரப்புக்கான தரவுகளை இதன்மூலம்
பெறலாம். அதின் அடிப்படையில் பயிரிடலாம். இது அனைத்தும் அந்த விவசாயிகளே அறிந்துகொள்ளும்
வகையில் அவர்களிடமே சேர்ப்பது. இதுதான் நமக்கு மனநிம்மதியை தருவதாய் இருக்கிறது. நமது அறிவு
சரியானபடி பயன்படுகிறது எனும் உணர்வைத் தருகிறது.
(ஒரு ஏக்கர் என்பது செயற்கைக்கோளுக்கு மிகச்சிறிய பரப்புதான். அவ்வளவு துல்லியம் சாத்தியமா என்று
வினவும்போது, சிரித்துக்கொண்டே இவ்வாறு கூறினார் : ‘முதன் முதலில் பூமியிலிருந்து மேலே பறக்க
ஆசைப்பட்டது சாத்தியமாக இல்லாதிருந்தது. ஆனால் நாம் வானூர்தி முதல் ராக்கெட் வரை
கண்டுபிடித்துள்ளோம். சாத்தியமில்லை என்றிருந்தோமானால் இவைகள் சம்பவித்திருக்காதே.?! எனவே
நிச்சயம் இது சாத்தியம்தான்’)





No comments:

Post a Comment