Monday 24 June 2019

 பெண்களுக்கு நன்மை செய்யும் காவலன் செயலி 
குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் 

காவலன் செயலியை எவ்வாறு இயக்குவது ?  நேரடி செயல் விளக்கம் 

உடல் பாகங்களை தவறாக தொட்டால் பெற்றோரிடம் சொல்லி விடுங்கள்

சார்பு ஆய்வாளர் அறிவுரை 







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பாக குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
                                                 ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தலைமை காவலர் கலா முன்னிலை வகித்தார்.தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வசந்தி மாணவர்களிடம் பேசும்போது, தற்போது குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.மாணவர்கள் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்.உதடு,மார்பு பகுதி,பிரைவேட் பார்ட்ஸ் போன்ற பகுதிகளை யாரையும் தொடவிடக்கூடாது.இதுபோன்ற இடங்களில் தொட்டால் உடனே பெற்றோர்,ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.1098 என்பது குழந்தைகள் பாதுகாப்பு எண்ணாகும் . மொபைலில் காசு இல்லாவிட்டாலும் இலவச எண்ணான இந்த எண்ணை  உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் உடன் தொடர்பு கொள்ளலாம்.என்று பேசினார்.காவலன் செயலி தொடர்பாகவும்,அதனை இயக்குவது எப்படி என்பதையும் விளக்கினார். மாணவர்கள் கோட்டையன் ,அய்யப்பன்,கீர்த்தியா,அஜய்பிரகாஷ்,ஜனஸ்ரீ ஆகியோர் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று கொண்டனர். நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பாக குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வசந்தி,தலைமை காவலர் கலா ஆகியோர் காவலன் செயலி தொடர்பாகவும் அதன் பயன்பாடு தொடர்பாகவும் விளக்கி கூறினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.








மேலும் விரிவாக :

காவலன் செயலியின் நன்மைகள் என்ன? எவ்வாறு செயலியினை இயக்குவது? 

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பாக குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வசந்தி,தலைமை காவலர் கலா ஆகியோர் காவலன் செயலி தொடர்பாகவும் அதன் பயன்பாடு தொடர்பாகவும்  நேரடி செயல் விளக்கத்தில் கூறியதாவது :
                                     காவலன் ஆப்பை பெற பிலேஸ்டோரில் சென்று காவலன் எஸ்.ஓ.எஸ் என தட்டச்சு செய்ய வேண்டும்.காவல்துறைக்கு உள்ள எம்பலம் போட்டு வரக்கூடிய செயலியை தொட வேண்டும்.பின்னர் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.காவலன் செயலியை திறந்த பிறகு நமது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.பின்னர் அவர்களுடையை பெயர் பதிவு செய்ய வேண்டும்.பிறந்த தேதி,பாலினம்,முகவரி  பதிவு செய்து உள்ளே செல்லவேண்டும்.பின்னர் நம்பிக்கைக்குரியவர் பெயர்,முகவரி பதிவு செய்ய வேண்டும்.பின்னர் காவலன் செயலி உங்கள் மொபைலில் வந்து விடும்.

காவலன் செயலியால் என்ன நன்மை ?

                           குழந்தைகள் ,பெண்கள் ,ஆண்கள் அனைவரும் இந்த செயலியை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.நீங்கள் எங்காவது ஆபத்தான கட்டத்தில் இருந்தால் இணைய வசதியுடன் இந்த செயலியை தொட்டாலே ஐந்து நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை சென்னை  காவல் தலைமை அலுவலகத்தில் உங்கள் தற்போதைய இருப்பிடத்துடன் புகைப்படம் பதிவாகி,உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து காவலர் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து விடுவார்கள்.உங்களுக்கு பாதுகாப்பு தருவார்கள்.எனவே நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடம் சொல்லி காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் சேமித்து கொள்ளுங்கள்.நீங்கள் முதன் முறையாக காவலன் செயலி பதிவு செய்யும்போது உங்களுக்கு வேண்டியவர் என்று கொடுத்த மொபைல்  எண்ணுக்கும் குறுந்தகவல் சென்று விடும். உங்களை எளிதாக பாதுகாக்கலாம்.
தேவையில்லாமல் இதனை தொடக்கூடாது.தொட்டால் ஐந்து நிமிடத்தில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து போன் வரும்.எனவே நமக்கு ஆபத்தான நேரம் என நினைக்கும்போது   மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த வேண்டும்.நமக்கு தெரியாத நபர்கள் சாக்லேட்,பிஸ்கேட் கொடுத்தால் வாங்க கூடாது.இதனை கொடுத்து நம்மை ஏமாற்றி விடுவார்கள்.
                                 தவறான தொடுதல் செய்பவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கும்.அதற்கென தனி சட்டங்கள் உள்ளன.பாதுகாப்பாக இருங்கள்.தைரியமாக பேசுங்கள்.நல்ல தொடுதல்,தவறான  தொடுதல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

 






No comments:

Post a Comment