Thursday 30 May 2019

  மாணவர் சேர்க்கை  விழிப்புணர்வு முகாம்

வில்லுப்பாட்டு,நடனம்,நாடகம் மூலம் பொதுமக்களின் வசிப்பிடத்தில்  மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு 

 

கல்விதான் சொத்து என்பதை வலியறுத்திய மாணவர்கள் 




 


தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
                             பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.முகாமில் வில்லுப்பாட்டு,நடனம்,விழிப்புணர்வு நாடகம்,மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துதல்   போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம்  கல்வி பயில்தல்,இன்றைய சூழ்நிலையில் பெண் கல்வியின் அவசியம் குறித்து  பள்ளி மாணவ,மாணவிகள் தங்களின் தனிதிறமையினை பொதுமக்களின் மத்தியில் வெளிப்படுத்தி கல்விதான் சொத்து என்பதை  விளக்கினார்கள். நிகழ்ச்சியில் வீடு,வீடாக சென்று பள்ளியின் சிறப்பம்சங்கள்,பயிற்று முறை,களப்பயணம் செல்லுதல் , மாணவர்கள் பெற்ற சான்றிதழ்கள் ,பரிசுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொதுமக்களும்,பிற பள்ளி மாணவர்களும் பரிசுகளை ஆர்வமுடன் பார்வையிட்டு இப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதில் பள்ளியில் பயிலும் பெற்றோர்கள் சார்பில் கௌசல்யா ,கார்த்திகா ,ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர், கருப்பையா  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்பள்ளியின் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் வசிப்பிடத்தில் சென்று நடத்துவது  குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் சார்பில்  மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி கல்வி விழிப்புணர்வு நடனம்,நாட்டியம் ,வில்லுப்பாட்டு ,நாடகங்களை பொதுமக்கள் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் நடத்தினார்கள். 





மேலும் விரிவாக :

தேவகோட்டை -   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் கல்விதான் சொத்து என்பதை வலியுறுத்தி மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் பொது மக்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
                              அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்   தங்களது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற முனைப்புடன்  கிராமம் கிராமமாக ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க சுற்றி வருவதை காண முடிகிறது. இவர்கள் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மனப்பான்மையை மாற்றி,  அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


                             இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை சேர்ப்பதில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.   தேவகோட்டை யில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் வில்லுப்பாட்டு,நடனம்,விழிப்புணர்வு நாடகம்,மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துதல்   போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம்  கல்வி பயில்தல்,இன்றைய சூழ்நிலையில் பெண் கல்வியின் அவசியம் குறித்து  பள்ளி மாணவ,மாணவிகள் தங்களின் தனிதிறமையினை வெளிப்படுத்தி கல்வியின் அவசியம் குறித்துவிளக்கினார்கள். இதில் பள்ளியில் பயிலும் பெற்றோர்கள் சார்பில் கௌசல்யா ,கார்த்திகா ,ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர், கருப்பையா கல்வியின் அவசியம் குறித்து விளக்கினார்.

                                    ஆண் படித்தால் அந்தப் படிப்பு அவனது குடும்பத்திற்கு மட்டுமே பயன்படும்.ஆனால் பெண் கல்வி கற்றால் உலகத்திற்கே பயன்படும் என்பதை பெண்கல்வியின் அவசியத்தை நாடகம் மூலம் எடுத்துக் காட்டினர். இதில் திவ்ய தர்ஷினி ,அம்முஸ்ரீ,ஜெயஸ்ரீ,சந்தோஷ் ஆகியோர் நடித்துக் காட்டினார்கள்.                                    
                                       கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் "கல்விக்கண் திறந்தவர்"என்ற தலைப்பில் ஆங்கில  நாடகத்தை மாணவி  காயத்ரி  தொகுத்தளிக்க மாணவிகள் சிரேகா ,கிருத்திகா மாணவர்கள் கார்த்திகேயன்,சபரி,ஐயப்பன் நடித்துக் காட்டினர் .மாணவர் சேர்க்கையை வலிவுறுத்தி ஆங்கிலத்தில் யோகேஸ்வரன்,மோகன்தாஸ்  பாடல்கள் பாடினார்கள்.உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகத்தை அஜய்,முத்தய்யன் ,சந்தியா,கிருத்திகா ,நித்யகல்யாணி ஆகியோர் நடத்தி காண்பித்தார்கள்.
                                        
                             கோடை விடுமுறை முழுவதும் இப்பள்ளி ஆசிரியைகளும் பள்ளி பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கு சென்று அரசு கொடுக்கும் விலையில்லா சலுகைகள் தொடர்பாகவும், கட்டணம் இல்லாமல் நல்ல கல்வி கொடுப்பது தொடர்பாகவும் விளக்கமாக எடுத்து கூறி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினார்கள் .

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் சார்பில்  மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி கல்வி விழிப்புணர்வு நடனம்,நாட்டியம் ,வில்லுப்பாட்டு ,நாடகங்களை நடத்தினார்கள்.





No comments:

Post a Comment