Thursday 6 June 2019

 புத்தகங்கள் பரிசளிப்பு விழா 

கோடை விடுமுறையில் படித்த புத்தகங்களில் பதில் சொன்ன மாணவர்களுக்கு பரிசு 

பயத்தை போக்கினால் வெற்றி நமதே - எழுத்தாளர் பேச்சு 








தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  புத்தகங்கள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                                    விழாவிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான  ஆதி வள்ளியப்பன் மாணவர்களுடன் கலந்துரையாடினார் .அவர் பேசும்போது : பயம் இல்லாமல் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.தொடர் பயிற்சியே திறமையாளர்களை உருவாக்கும் .மரம் வளர்த்தால்தான் வரும்காலத்தை காப்பாற்ற முடியும்.நேற்று கற்றுக்கொண்டதை விட இன்று அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.தனக்கு பிடித்ததை தாண்டி செயல்பட்டால் பல வெற்றிகளை அடையாளம் என்று பேசினார்.கோடை விடுமுறையில் புத்தகங்கள் படித்து சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான  ஆதி வள்ளியப்பன் மாணவர்களுடன் கலந்துரையாடினார. கோடை விடுமுறையில் புத்தகங்கள் படித்து சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.




பின்குறிப்பு :  இந்து தமிழ் நாளிதழில்  செய்தி பிரிவின் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் ஆவார் .

No comments:

Post a Comment