Thursday 20 June 2019

யோகா செய்து அசத்திய மாணவர்கள் 

 சர்வதேச  யோகா தின விழா


உடலும் ,மனமும் புத்துணர்வு பெற  யோகா செய்யுங்கள் 

 போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சு 










தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
                                               ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , காவல்  சார்பு ஆய்வாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை  வகித்தார்கள் .தேவகோட்டை நகர் காவல் நிலைய    ஆய்வாளர் கீதா தலைமை தாங்கி   பேசுகையில்  , உடலும் ,மனமும் சேர்ந்து புத்துணர்வுடன் இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்.அதற்கு அனைவரும் இளம் வயது முதலே யோகாவை கற்றுக்கொண்டு தினமும் யோகா செய்ய வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளிவிட்டால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும்.ஆயுட்காலம் கூடும்.அது யோகவினால்தான் முடியும்.இவ்வாறு பேசினார்.மாணவர்களின் யோகா நிகழ்வும் நடைபெற்றது.காவலர் அந்தோணிராஜ் உட்பட பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தினம் விழாவில்  தேவகோட்டை நகர் காவல்  ஆய்வாளர் கீதா  சிறப்புரையாற்றினார் .உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமுருகன்  உள்ளனர்.



No comments:

Post a Comment