Tuesday 25 June 2019

சரியான நேரத்தில் கிடைத்த உதவியும் ,சமோசா படுத்தியபாடும்





ரயிலில் விற்கும் சமோசாவை சாப்பிடாதீர்கள்

               நண்பர்களே கடந்த வாரத்தில் இரண்டு நாள் சென்னை வரை எனது உறவினர் பேசிமுடிக்கும் நிகழ்விற்காக சென்னை சென்றேன்.பல ரெயில்களில் இடம் கிடைக்காததால் பல்லவனில் டிக்கட் புக் செய்து சென்றேன்.காலை 11 மணி அளவில் சமோசா வாங்கி சாப்பிட்டேன்.அப்போது ஒன்றும் தெரியவில்லை.ஆனால் மாலை நான்கு மணி அளவில் வயிறு சத்தம் போட ஆரம்பித்து விட்டது.மதியம் இரண்டு மணி அளவில் மக்கள் குரல் நாளிதழின் செய்தி ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களையும்,மூத்த பத்திரிகையாளர் திரு.ராம் ஜி வேணு கோபாலன் அவர்களையும் சந்தித்தேன்.சந்தித்த பிறகு ரிச் ஸ்ட்ரீட்டில் உள்ள மல்லிகா ரெசிடென்சியில் தங்கினேன்.அப்போதுதான் உடல்நிலை லேசாக சுமாரானது.லேசாக காய்ச்சலும் வந்து விட்டது.

ஹோட்டல் உரிமையாளர் உதவி :
 
                                எனது மனைவியும்,மகனும் காரைக்குடியில் இருந்தனர்.விழாவிற்கு நான் மட்டுமே சென்னை சென்றேன்.மாலை 5 மணி  அளவில் எனது உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது.எனக்கு தெரிந்த ஒரு மருத்துவருக்கு போன் செய்தேன்.அவர் சில மாத்திரைகளை எனக்கு குறுந்தகவல் அனுப்பினார்.பிறகு நான் தங்கியிருந்த ஹோட்டல் உரியமையாளர் திரு.பாஸ்கரன் அவர்களை தொடர்பு கொண்டேன்.திரு.பாஸ்கரன் அவர்கள் எனக்கு சிவசைலநாத பள்ளி செயலரின் மூலம் பழக்கம்.அவரும் உடன் அவரது மேலாளர் திரு.கருப்பையாவுக்கு போன் செய்து எனக்கு உதவி செய்ய சொன்னார்.பிறகு அவரது உதவியுடன் மருந்து வாங்கி கொண்டு,எனது நண்பர் திரு .ஆனந்த் அவர்கள் வந்த உடன் எனது ரூமில் சென்று சிறிது நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு அவரும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.அவர் சென்ற உடன் இரவு இரண்டு முறை டிசென்ட்ரி ஆகி விட்டது.எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.ஹோட்டல் மேலாளர் அவர்களுக்கு போன் செய்தால் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.பிறகு நானே கொஞ்சம் தாக்கு பிடித்து தண்ணீர் குடித்து,பிஸ்கேட் சாப்பிட்டு இரவு மாத்திரைகளை போட்டு படுத்து பாதி தூங்கி விட்டேன்.

மருத்துவரின் ஆலோசனை :
 
                               காலையில் எழுந்த உடன் மீண்டும் இரண்டு முறை டிசென்ட்ரி ஆகி விட்டது.எனக்கு மருந்து கொடுத்த மருத்துவருக்கு போன் செய்தேன்.அவர் நல்ல உறக்கத்தில் இருந்ததால் போன் எடுக்கவில்லை.இன்னொரு மருத்துவருக்கு போன் செய்தேன்.அவரோ சார்,
இந்த நிலையில் நீங்கள் ,அரிசி கஞ்சி சாப்பிடுங்கள்,அதோடு மோர் சுமார் ஒன்றரை லிட்டர் கலந்து கொண்டு அதனில் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பும்,சக்கரையும் சேர்த்து 100 ml அளவில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள்.ஆனால் உங்களுக்கோ அறையில் இருப்பதால் அரசி கஞ்சி கிடைக்க வாய்ப்பு இல்லை.எனவே மதியம் சாதம் வாங்கி கொண்டு அதனில் வெறும் தயிர் ஊற்றி சாப்பிடுங்கள் என்று சொன்னார்.சரி என்று கேட்டு கொண்டு அப்படியே படுத்துவிட்டேன்.

சரியான நேரத்தில் கிடைத்த உதவி :
 
                                         முதல் நாளே தினமலர் மூத்த பத்திரிகையாளர் திரு.முருகராஜ் அவர்களை சந்திக்க திட்டமிட்டு அவர்களும் என்னை தொடர்புகொண்டும் என்னால் அவர்களை சந்திக்க இயலவில்லை.உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் திரு.முருகராஜ் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு.எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று.நான் எனது நிலையை தெளிவாக அவரிடம் கூறிவிட்டு,சார் எனக்கு உங்கள் வீட்டுக்கு வரும்போது மோர் வேண்டும் என்றும்,அரிசி கஞ்சி வேண்டும் என்று கேட்டு கொண்டேன்.அவர்களும் அருமையாக கொடுக்கிறோம் என்று அன்போடு கூறினார்.

 தினமலர் பத்திரிகையாளருடன் முந்தைய சந்திப்பு :

                                            குடும்பம் அருகில் இல்லாத நிலையில் ,யாருடைய உதவியும் இன்றி சிரமப்பட்ட நேரத்தில் அன்னாரின் தொலைபேசி வழி செய்தி எனக்கு ஆறுதலாக இருந்தது.பிறகு ஓரளவு தேற்றி கொண்டு , ஆட்டோ பிடித்து அன்னாரின் இல்லத்துக்கு சென்றேன்.அன்னாருடன் எனக்கு தொலைபேசி வழி தொடர்பு மட்டுமே உண்டு.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நாங்கள் அந்தமான் சென்று விட்டு திரும்புகையில் எங்களை ரயில் நிலையத்தில் வந்து பார்த்துவிட்டு , ரயில் கிளம்பும் வரை எங்களுடன் இருந்து விட்டு சென்றார்கள்.அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து இன்றுதான் பார்த்தேன்.

 குடும்பத்தினரின் அன்பு :

                              அன்போடு என்னை அழைத்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.அவரது குடும்பத்தினருடன் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள்.அவரது துணைவியாரும் என்னிடம் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் போன்று அன்புடன் பேசிக்கொண்டார்கள்.எனக்கு மகிழ்ச்சியாகவும் ,ஆறுதலாகவும் இருந்தது . சென்ற உடன் மோர் உப்பும்,சர்க்கரையும் கலந்து கொடுத்தார்கள்.அன்னார் என்னிடம் தொலைபேசியில் பேசும்போதே ,எங்கள் வீட்டில் மோர் அருமையாக இருக்கும் என்று கூறினார்.அதேபோன்று மோர் அருமையாக இருந்தது.அவர்களின் அன்பான உபசரிப்பும் அருமையாக இருந்தது.பிறகு சிறிது நேரத்தில் அவரது துணைவியார் அவர்கள்,சார் சாத்துக்குடி ஜூஸ் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டு அருமையான சாத்துக்குடி ஜூஸ்ம் கொடுத்து அன்போடு பார்த்துக்கொண்டனர்.நீண்ட நேரம் அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.அன்னாரது இரண்டு மகன்கள்,மருமகள் ஆகியோரையும் எனக்கு அறிமுகப்படுத்தி பேசச்சொன்னார்கள்.அவர்களும் அன்போடு பேசிக்கொண்டார்கள்.

மோர்,அரிசி கஞ்சி , தாளிக்காத தயிர் சாதத்துடன் அன்பான உபசரிப்பும்   கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி :
                                                   பிறகு சில மணி நேரம் கழித்து சூடான அரிசி கஞ்சியும் தயார் செய்து கொடுத்தார்கள்.அன்னாரும் பல மணி நேரங்கள் ஞாயிற்றுக்கிழமை பொழுதை ஒதுக்கி என்னுடன் அன்போடு பேசினார்கள்.அவரது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து என்னையும் கவனித்து கொண்டனர்.அன்னார் அவர்கள் பேசும்போது அன்பு , நன்மை இரண்டை  மட்டுமே மையமாக வைத்து பேசியது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
                                              பிறகு மதியம் இரண்டரை மணி அளவில் அன்னார் அவர்கள் சாப்பிடும்போது,என்னையும் அன்புடன் அருகில் இருக்க சொல்லி தாளிக்காத தயிர் வழங்கி சாதத்தில் ஊற்ற சொல்லி சாப்பிட சொன்னார்கள்.எனக்கு உடல் நல்ல நிலையில் இருந்தது.ஓரளவு சத்தும் கிடைத்தது போல் இருந்தது.அந்த தயிர் சாதத்தையும் சாப்பிட்டேன்.நல்ல தெம்பு கிடைத்தது.அன்புடன் பரிமாறிய அன்னாரின் துணைவியாருக்கும் மிக்க நன்றிகள் பல.எனது உடல்நிலை திரு.முருகராஜ் அவர்களது குடும்பத்தாரின் அன்பான உதவியால்  மிகவும் நன்றாக சரியாகிவிட்டது.பிறகு மாலை 3.30 மணி அளவில் அவர்களே என்னை வண்டியில் அழைத்து சென்று வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற எனது உறவினர் விழாவில் பங்கேற்க வைத்தார்கள்.பிறகு இரவு அழைத்து உடல்நிலை எப்படி உள்ளது என்று கேட்டுக்கொண்டார்கள்.சரியான நேரத்தில் கிடைத்த உதவி இதுதான்.மருத்துவர் என்னிடம் கூறும்போது,நீங்கள் அறையில் தங்கி உள்ளீர்கள்,இதுவெல்லாம் கிடைக்க வாய்ப்பு கம்மி என்று சொன்னது உண்மைதான்,ஆனாலும்  , நண்பர்கள் என்கிற பழக்கத்தின் அடிப்படையில் சரியான நேரத்தில் உதவி செய்த திரு.முருகராஜ் அவர்களுக்கும்,அவரது துணைவியார் அவர்களுக்கும்,குடும்பத்திற்கும் மிக்க நன்றிகள் பல.

போன் செய்த போதெல்லாம் பதில் அளித்த மருத்துவர் தமீம் அன்சாரிக்கு நன்றி :
                                                                 இந்த நேரத்தில் நான் போன் செய்த போதெல்லாம் எனக்கு சரியான முறையில் நம்பிக்கை கொடுத்து மாத்திரைகள் சொல்லி உதவிய அரசு மருத்துவர் தமீம் அன்சாரி அவர்களுக்கும் நன்றிகள் பல.சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலின் உரிமையாளர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள் பல.

மக்கள் குரல் மூத்த பத்திரிகையாளர் ,தலைமை செய்தி ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி :

                              முதல் நாள்  மக்கள் குரல் மூத்த பத்திரிகையாளர் திரு.ராம்ஜி அவர்களை சந்தித்தபோது எனக்கு அவரது குரலை மட்டுமே இரண்டு ஆண்டுகளாக கேட்டு,அன்றுதான் நேரில் சந்தித்தபோது மிகவும் ஆச்சரியம். அவரது பிஸியான பணிகளுக்கு இடையில் எனக்கு நேரம் ஒதுக்கி சந்தித்தவுடன்,முதலில் அவர்களது தலைமை செய்தி ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களை அறிமுகப்படுத்தி பேச சொன்னார்கள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.திரு.முத்துக்குமார் அவர்களும் என்னிடம் அன்பாக பேசினார்கள்.பிறகு திரு.ராம்ஜி அவர்கள் எனக்கு நாடகம் பார்க்க பாஸ் கொடுத்தார்கள்.ஆனால் என்னால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செல்ல இயலவில்லை.இரவு போன் செய்த திரு.ராம்ஜி அவர்கள் என்னிடம்,உடலை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்,இதனை விட பெரிய நிகழ்வுக்கு அடுத்த முறை செல்வோம் என்று கூறினார்கள்.நம்பிக்கை தரும் வார்த்தைகள்.
                                              இரண்டு நாள் எனது சென்னை பயணம் பல புதிய நட்புகளையும்,உறவுகளையும்,புதிய நம்பிக்கையும்,அனுபவத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்பது உண்மை.அனைவருக்கும் நன்றிகள் பல.

அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
                                            













 

No comments:

Post a Comment