Sunday 16 June 2019

ரோபோ வடிவமைப்பு மற்றும் செயலாற்றல் குறித்த ஒரு நாள் பயிற்சி



 இன்றைய நிகழ்ச்சி (17/06/2019)

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 17/06/2019
நேரம் : காலை 9.15 மணி

தலைமை : முனைவர் N .ராஜேந்திரன் ,துணைவேந்தர் ,அழகப்பா பல்கலைக்கழகம் ,காரைக்குடி.

பயிற்சி அளிப்பவர் : தேசிய மற்றும் சர்வேதச விருதாளர் அன்பு.கெனித் ராஜ், ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலார்,சென்னை.

நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

நமது பகுதியில் நடைபெறும் ரோபோ தொடர்பான பயிற்சி இங்குதான் முதல் முறையாக நடைபெற உள்ளது.பெற்றோர்களும்,பொதுமக்களும் மாணவர்களை இப்பயிற்சி முகாமுக்கு பங்கு பெற இலவசமாக அழைத்து வரலாம்.பயிற்சி நேரம் காலை 9.15 மணி முதல் 2.30 மணி வரை.


 
தொடர்புக்கு
லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை. 8056240653

ரோபோ செய்து பார்க்க அனைவரும் வருக.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இலவச ரோபோ பயிற்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ரோபோ வடிவமைப்பு மற்றும் செயலாற்றல் குறித்த ஒரு நாள் பயிற்சி நாளை 17/06/2019  நடைபெற உள்ளது.
                                      இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது :
                                              திண்டிவனம் அருகே உள்ள கீழ் சித்தாமூர் கிராமத்தை சார்ந்த தேசிய மற்றும் சர்வேதச விருதாளர் அன்பு.கெனித் ராஜ் என்கிற ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலார் எங்கள் பள்ளியில் நாளை 17/06/2019 அன்று ரோபோ வடிவமைப்பு மற்றும் செயலாற்றல் குறித்த ஒரு நாள் பயிற்சயளிக்க உள்ளார்.இந்நிகழ்வை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் துவக்கி வைக்க உள்ளார்.நிகழ்வில் மாணவர்களுக்கு ரோபோ செய்வது தொடர்பான பயிற்சி ஒரு நாள் முழுவதும் வழங்கப்படவுள்ளது .பயிற்சி முற்றிலும் இலவசம்.மாணவர்கள் அனைவரும் பங்குகொண்டு பயன்பெறலாம் என்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment