Saturday 2 February 2019

கோரிக்கைகளுக்காக போராடிய நிலை மாறி வேலைக்காக போராடும் நிலை ஏன்? ஏன்?  ஏன்?
                          
ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிமாக தொய்வடைந்தது  ஏன்?


                                                                   சமீபத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிமாக தொய்வடைந்துள்ளது.இது தொடர்பாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சி.மாதவன் ( முன்னாள் தலைமை ஆசிரியர்,மன்னர் மேல்நிலைப் பள்ளி ,சிவகங்கை ) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் :
                                  முன்பு நடந்த போராட்டங்களில் நாங்கள் தினசரி சுமார் 10 முதல் 20 பேர் தினமும் வட்டார அளவில் கூடி ஒரு வேன் பிடித்து , யாரெல்லாம் பள்ளி திறந்து உள்ளனரோ , அவர்களையும்,அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் தினசரி சென்று அதனை அடைக்க சொல்லி வலியுறுத்துவோம்.ஒரு நாள் தவறாமல் தினமும் குழுவாக சென்று அனைத்து அலுவலகங்களையும் அடைக்க சொல்லும்போது 98 சதவிகிதம் இயங்கவில்லை என்கிற தகவலே நமக்கு வெற்றியை கொடுக்கும் .
                                           தினசரி மறியல் என்பதை தவிர்த்து ஆர்ப்பாட்டமாக வைத்து இருக்கலாம்.போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் அது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
                                            கைதாவோருக்கு    ஜாமீன் என்பது எல்லாம் தேவையில்லை.நான் 25 நாள்கள் சிறையில் இருந்தேன்.ஜாமீனில் நாங்கள் வெளி வராவில்லை.அரசு முடிவு எடுத்து எங்களை வெளியே போக சொன்னபோதுதான் நாங்கள் வெளியில் வந்தோம்.ஜாமீன் எடுக்கயாரும் வரவில்லை.அது தேவை இல்லாமல் கால விரயத்தை ஏற்படுத்தி நமது உழைப்பையும் வீணடித்து விடும்.
                                           நிறைவாக நாங்கள் போராடும் காலங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு குழு,அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூட சொல்வதற்கு ஒரு குழு,மறியல் என்றால் அதற்கு ஒரு குழு என்று தலைமை வழிகாட்டுதலோடு செயல்படுத்தினோம்.தலைமை ஆசிரியர்கள் பள்ளியை திறந்தால் நாக்கை புடுங்கி கொள்வதுபோல் கேள்விகள் கேட்போம்.அதிலேயே அவர்கள் மறுநாள் பள்ளியை திறக்கமாட்டார்கள்.மொத்தத்தில் தலைவர்கள் திட்டமிடல் நன்றாக இருந்தால் மட்டுமே போராட்டம் வலுப்பெறும்.இந்த போராட்டத்தில் போராட்டக்கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் களத்தில் இருந்தனர் .ஆனால்  தலைவர்கள்தான் போராட்டத்தை வலுப்படுத்த தவறிவிட்டனர்.செய்வதை திருந்த செய்ய முயற்சி செய்தால் வெற்றி தானாக கிடைக்கும்.நன்றி.
புரட்சிகர வாழ்த்துக்கள்.






                                                        
          

No comments:

Post a Comment