Wednesday 20 February 2019

நடுநிலைப் பள்ளி  மாணவர்களுடன் பல்கலைகழக துணைவேந்தர் கலந்துரையாடல் 

மாணவர்களின் சிறப்புக்கு காரணம் ஆசிரியர்களே 

கேள்விகளே ஆராய்ச்சிக்கு அடிப்படை 

பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு 








தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் கலந்துரையாடல்  நடைபெற்றது.
                                                   தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார்.திருநெல்வேலி மாவட்டம் நெடுவயல் அச்சனுர் சிவசைலா நடுநிலைப்பள்ளி தாளாளர் கணேஷ் முன்னிலை வகித்தார்.அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது , மாணவர்களாகிய உங்களின் சிறப்புக்கு காரணம் ஆசிரியர்கள்தான்.கேள்விகள் அதிகம் கேட்டல்தான் ஆராய்ச்சி அதிகம் நடைபெறும்.மாணவர்களாகிய நீங்கள் தொலைநோக்கு திட்டத்துடன் படித்து முன்னேறுங்கள்.என்று பேசினார்.மாணவர்கள் காயத்ரி,அஜய்பிரகாஷ்,பாக்கியலட்சுமி,அய்யப்பன் ஆகியோர் தங்களின் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்தமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நெடுவயல் அச்சனுர் சிவசைலா நடுநிலைப்பள்ளி தாளாளர் கணேஷ் ஆகியோர் உள்ளனர்.





மேலும் விரிவாக :


தமிழ்வழி கல்வி பள்ளியில்  படித்துதான் துணைவேந்தர் ஆகியுள்ளேன்

பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமிதம் 

 
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நெடுவயல் அச்சனுர் சிவசைலா நடுநிலைப்பள்ளி தாளாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் மாணவர்களிடம் பேசியதவாவது :


உங்களைப் போன்று நானும் அரசு பள்ளியில் சென்னையில் 11ம் வகுப்பு வரையிலும் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தேன்.பொருளாதாரம்,சமூகம் போன்ற காரணிகள் எப்போதுமே நமது கல்வியை பாதிக்காது.மற்ற மாணவர்களை காட்டிலும் அறிவு திறமையில் நீங்கள் சிறந்து விளக்குங்கள்.உங்களிடம் அதிக திறமை உள்ளதை நான் பார்த்தேன்.எதிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் எந்த செயலிலும் மலைப்பு தோன்றாது.

மாணவர்களின் கேள்விகளும்,பல்கலைக்கழக துணைவேந்தரின் பதில்களும்:

அய்யப்பன் : துணைவேந்தர் பதவிக்கு வர  தனி படிப்பு படித்தீர்களா?

பதில் : அப்படியில்லை.கல்வி,கேள்விகளில் நல்ல மாணவராக முதலில் செயல்பட்டேன்.நல்ல ஆசிரியராக செயல் புரிந்தேன்.நல்ல ஆராய்ச்சியாளராக என்ன செய்ய வேண்டும் அந்த பணியை செய்தேன்.நிர்வாகத்தில் நான் செய்த பணியை ஆவணப்படுத்தி உள்ளேன்.நான் புதியதாக நான்கு துறைகளை உருவாக்கியுள்ளேன்.கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்வதால் இன்றைய சூழ்நிலையில் நான் தகுதியானவனாக கருதப்பட்டு இந்த பதவி கிடைக்க வாய்ப்பானது.எந்த நிலையிலும் சிறந்து விளங்கினால் சிறப்பை உயர்வாக அடைய முடியும்.

காயத்ரி : நீங்கள் ஆரய்ச்சியாளர் - ஆராய்ச்சியில் கி.மு.,கி.பி., எப்படி வந்தது? அது பற்றி சொல்லுங்கள் 

பதில் : ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் வரலாறு உள்ளது.ஐரோப்பியர்கள் அவர்கள் வரலாற்றுக்கு சில விதிமுறைகள்,அதாவது சமூகவியல்,பொருளாதாரம் ,இயற்பியல்,வேதியல்,வரலாறு என எல்லாவற்றுக்கும் விதிமுறைகள் வைத்து உள்ளனர்.கிரேக்க தந்தை ஹெரோடோட்டஸ் கி.மு.5ம் நூற்றாண்டு.சீனா கி,மு.300- வரலாறு நூல்கள்,சான்றுகள்,காலகட்டம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பழமையான ஆண்டு பின்னோக்கி தள்ளப்படும் .சிந்து சமவெளி கி.மு.3005 ,அளவுகோல் வளர்ந்துகொண்டே இருக்கும்.ஐரோப்பியர்கள் அளவுகோலை அடையாளம் வைத்து இருந்தனர்.இப்பொழுது கி.பி.2019.கிறித்துவர்களுக்கு அடையாளம் மதம் பொருந்தும்.ஜப்பான்,இந்தியா,இலங்கை,இலத்தீன் ,அமெரிக்க நாடுகளுக்கு பொருந்துமா? மதத்தை தழுவியதாக இருக்கவில்லை.தற்போது காமன் இராக் வைத்து பொதுவான காலம் என்கிறார்கள்.பொதுவான காலத்திற்கு முன்பிருந்த காலம்,குறிப்பிட்ட மதம்,இனம் சார்ந்து இருக்கக்கூடாது.

பாக்கியலட்சுமி : தாங்கள் செய்துள்ள பல்வேறு ஆரய்ச்சியில் உங்களுக்கு பிடித்த ஆராய்ச்சி எது?

பதில் : எனக்கு அனைத்து ஆராய்ச்சியிலும் ஈடுபாடு அதிகம்.இன்று வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்.நான் முதன் முதலாக வகுப்பு எடுக்கும்போது ஐரோப்பிய வரலாறில் கிழக்கத்திய பிரச்சினை பற்றி நடத்தும்போது ஒரு மாணவர் ,இதற்கு பால்கன் பிரச்சினை என்று மறுபெயர் சொன்னீர்களே,பால்கன் என்றால் என்ன ? என்று கேட்டார்.எனக்கு இந்த கேள்வி வரவில்லை.முனைவர் பட்டம் பெற்ற நிலையில் எனக்கு ஏன் இந்த கேள்வி வரவில்லை என்று நான் சிந்தித்து பார்த்தேன்.புரிந்து படிக்க வேண்டும்.செய்திகளோடு தொடர்பு படுத்தி படிக்க வேண்டும். 
                                          கேள்விகள் கேட்பதே ஆராய்ச்சியின் அடிப்படை.அறிவு,மேன்மை,கேள்விகள்,ஆராய்ச்சி இவற்றில் ஈடுபடும்போது உலகத்தையே வியந்து பார்க்கிறோம்.அதுதான் ஆராய்ச்சி.ஏன்,எதற்கு,எப்படி,எவ்வளவு,என்ன என்று தோன்ற வேண்டும்.பொது அறிவு இருக்க வேண்டும்.சுற்றியுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.பொது மக்கள்,ஆய்வாளர்கள் இவை வேற,வேற.ஆய்வு என்பது ஈடுபாடு.கும்பகோணம் அரசு கல்லூரியிலும் ,சென்னை துறை முகத்திலும் ஆங்கிலத்தில் பெயிலான ஒருவருக்கு சிலை வைத்து உள்ளனர்.ஆனால் அவர் ஆங்கிலம் நன்றாக பேசுவார்,சிறந்த ஆரய்ச்சியாளர்.கணிதபுலமை பெற்றவர்.ஜீனியஸ் அதனால்தான் சிலை வைத்து உள்ளனர்.34 ஆண்டுகளாக நிருவாக மேலாண்மை துறையில் உள்ளேன்.

காயத்ரி : அய்யா,உங்கள் மாணவரின் கேள்வியான  பால்கன் பிரச்சினை  என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள்,அதனை சொல்லுங்கள் என்று கேட்டார்.

பதில் :  எனக்கு பால்கன் பிரச்சினை பற்றி தெரியவில்லை.நூலகம் சென்று அதற்கு பதில் தேடினேன்.ஆங்கில எழுத்து  பி என்பதற்கு துருக்கிய சொல்.அது பேரரசு ஒருவர் கைப்பற்றிய பகுதி.கிழக்கு,மேற்கு மலைத்தொடர் என்பது விளக்கம்.அதனை எடுத்து சொன்னேன்.

அஜய் பிரகாஷ் : தாங்கள் துணை வேந்தர் ஆவதற்கு துணை நின்றவர்கள் யார்? யார் ?

பதில் : எனது ஆசிரியர்கள்தான் எனக்கு துணை புரிந்தனர்.எனக்கு அறிவியல் எடுத்த ஆசிரியர் என் கண்முன்னே இன்றும் உள்ளார்.கண்ணின் படத்தை வரைந்து அவர் வரையும்போது எங்களையும் வரைய சொல்லி சொல்வார் .அறிவியல் செயல் முறைகளை விதிகளை செய்து பார்த்து கற்று கொடுப்பார்.இதெல்லாம் 11ம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்றது.
                               ஆங்கில இலக்கணம் எங்களுக்கு தெரியாதபோது சனிக்கிழமை,ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்பு வைத்து எனக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களை =என்னால் மறக்கமுடியாது.அதிக ஊக்கம்,அதிக ஆதரவு இவைதான் துணைவேந்தராக வர காரணம்.

காயத்ரி : உலக மேப் குறிக்க  எளிமையான வழி ஏதேனும் உள்ளதா?

பதில் : ஐ.ஏ .எஸ்.,சிவில் சர்வீஸ் என அனைத்து தேர்வுகளிலும் மேப் தொடர்பான கேள்வி உண்டு.பயிற்சியினால் மட்டுமே இது முடியும்.இப்பொழுது டிஜிட்டல் கணினி வந்து விட்டது.எந்த இடம் என்பதை எளிதாக குறிக்க முடியும்.

முத்தய்யன் : துணைவேந்தராக என்ன படிக்க வேண்டும் ?

பதில் : பல்கலைக்கழகத்தின் அச்சாணியே துணைவேந்தர் பதவிதான்.எனக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் என்னை விட அறிவிலும்,திறமையிலும் சிறந்தவர்கள்.ஆனால் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது.செய்யும் வேலை , அறிவு,இறுகிய மனது,எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவையெல்லாம் இருக்க வேண்டும்.நல்ல ஆசிரியராக பணி புரிந்து நிர்வாக திறமை இருந்தாலே துணைவேந்தராக வர முடியும்.

இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பதில் அளித்தார்.


No comments:

Post a Comment