Wednesday 13 February 2019

அன்பை பகிருங்கள் - பன்மடங்கு பெருகும் 

துபாய் பொறியாளர் பேச்சு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் துபாய் நாட்டின் கட்டிட பொறியாளருடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.









                                                         ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.துபாய் நாட்டின் பொறியாளர் ரவி சொக்கலிங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மாணவர்களிடம் பேசும்போது , அன்பை அதிகமாக அனைவரிடமும் காட்டுங்கள்.அது பன்மடங்கு பெருகும்.உங்களின் தகுதியை வளர்த்துக்கொண்டு அளவில்லாமல் உழையுங்கள் .வாழ்க்கையில் வெற்றி உங்களை தேடி வரும்.என்னால் முடியும் என்று நம்புங்கள்.திருக்குறள் நடனம் இந்த பள்ளியில்தான் நான் பார்த்து உள்ளேன்.நன்றாக இருந்தது. என்று பேசினார்.தொடர்ந்து புத்தகம் படித்து அதனை வெளிப்படுத்தும் மாணவர்கள் வெங்கட்ராமன்,ஜனஸ்ரீ ,சிரேகா ,சந்தியா,காயத்ரி,கீர்த்தியா,திவ்யஸ்ரீ , நதியா ஆகியோர் மாணவர் வாசகர்   விருது சான்றிதழ் பெற்றனர்.பல்வேறு மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் துபாய் நாட்டின் கட்டிட பொறியாளர் ரவி சொக்கலிங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடி பரிசுகள் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.







மேலும் விரிவாக :

 தகுதியை வளர்த்துக்கொண்டு,அளவில்லாமல் உழையுங்கள் 

என்னால் முடியும் என்று நம்பிக்கை வையுங்கள் 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம் 

துபாய் நாட்டின் 96 மாடி கட்டிய கட்டிட பொறியாளர் ரவி சொக்கலிங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல் 


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் ரவி சொக்கலிங்கம் பேசியதவாவது:


                                                                                    அரசு பள்ளியில் படித்து பொறியாளராகி பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் பணியாற்றி ,தற்போது துபாய் நாட்டில் கட்டிடங்கள் கட்டும் பணியில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு உள்ளேன்.
                                              உங்கள் அனைவராலும் சாதிக்க முடியும்.சாதித்த அனைவரும் தகுதியை வளர்த்து கொண்டு அளவில்லாமல் உழைத்தவர்கள்.நான் இன்னும் படித்து கொண்டு உள்ளேன்.முன்பு எல்லாம் வேலை கிடைப்பது கடினம்.ஆனால் இப்போது வானமே எல்லை.கோடிக்கணக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது.என்னால் முடியும் என்று நம்புங்கள்.அதனை தாளில் எழுதி உங்கள் வீட்டில் ஓட்டுங்கள் .அதனை உங்கள் மனச்சோர்வு வரும்போதெல்லாம் பார்த்துக்கொண்டே இருங்கள்.வெற்றி வசப்படும்.நல்ல பழக்கத்தை வசப்படுத்தினால் வாழ்க்கை வளமாகும்.அன்பை அனைவரிடமும் அதிகமாக காட்டுங்கள்.அது உங்களிடம் திரும்பி வரும்.பன்மடங்கு பெருகும் .
                             96 மாடி கட்டிடம் கட்டும்போது எனக்கு பிரமிப்பாக இருக்கும்.கட்டி முடித்தபிறகு எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்.அதிகமான மொழிகளை கற்று கொள்ளுங்கள்.அது மிகுந்த உதவியாக இருக்கும்.இவ்வாறு பேசினார்.

மாணவர்களின் கேள்விகளும்,ரவி சொக்கலிங்கம் அவர்களின் பதில்களும் :

கீர்த்தியா : துபாயில் தோண்டினாலே பெட்ரோல் கிடைக்குமாமே ,உண்மையா?

பதில் : உண்மைதான்.இயற்கை வளங்கள் எங்கு உள்ளதோ அதுபோல் அங்கு உள்ளவை கிடைக்கும்.

வெங்கட்ராமன் : துபாயில் என்ன மொழி பேசுவார்கள் ?

பதில் : அரபு மொழி,ஆங்கிலம்,ஹிந்தி என பல மொழிகள் பேசக்கூடிய பல நாட்டை சார்ந்தவர்கள் உள்ளனர்.

காயத்ரி : துபாயில் பார்க்கக்கூடிய இடங்கள் எவை ?

பதில் : துபாய் சூப்பரான நகரம்.நிறையை இடங்கள் பார்க்க கூடியவை.

நித்திய கல்யாணி : 96 அடுக்கு மாடி கட்டிடம் கட்டி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆனது ?
       
பதில் : பூமிக்கு கீழே ஐந்து மாடியுடன் 96 மாடி சேர்த்தால் மொத்தம் 101 மாடி கட்டிடம் அது.இதனை கட்ட மூன்றரை வருடம் ஆனது.அங்கே எல்லாம் 24 மணி நேரமும் வேலை செய்வார்கள்.அங்கு இரவு,பகல் பாராது எந்த நேரமும் வேலையை பொறுப்பாக செய்வததுதான் பாராட்டுதலுக்குரியது.

கிருத்திகா : பி.எஸ்.என்.எல்.யில் வேலை பார்த்து எவ்வாறு துபாய் சென்று கட்டிடம் கட்டினீர்கள் ?

பதில் : பி.எஸ்.என்.எல்.யில் தொலைபேசி கட்டிடங்கள் ,ஊழியர் குடியிருப்புகள் ,டவர் போன்ற கட்டிட வேலைகளை மேற்கொண்டதால்தான் துபாயில் சென்றும் அதே வேலை செய்தேன்.செய்வன திருந்த செய் என்று சொல்வார்கள்.துபாயில்  எல்லோருமே பொறுப்பாக செயலாற்றுவார்கள்.3000 பேர் 96 மாடி கட்டிடம் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.அவரவர் செய்யும் வேலையை சிறப்பாக செய்வார்கள்.நான் தரக்கட்டுப்பாடு துறையில் பணியாற்றுவதால் எல்லாரும் சரியாக செய்கிறார்களா என கண்காணித்தல் எனது வேலை.அதற்கு அங்கு முழு அதிகாரம் அரசு வழங்கி உள்ளது.அதனால் உலக தரம் வாய்ந்த கட்டிடம் கட்டப்படுகிறது .96 மாடி கட்டிடம் கட்டும்போது நாங்கள் அதிகம் பாதுகாப்பக இருக்க முயற்சி செய்தோம்.

முத்தய்யன் : இந்தியாவில் இருந்து துபாயில் வேலைக்கு சேர்ந்தீர்கள் ?

பதில் : நீங்கள் எப்படி படித்து உள்ளீர்கள் என்பதற்கு தேர்வு வைப்பது போல் எங்களுக்கு துபாயில் இன்டெர்வியு வைத்தார்கள்.துபாய் விளம்பரத்தை பார்த்து ஆள் எடுக்க கூடிய நிறுவனத்துக்கு மனு கொடுத்தேன்.அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னதால் வேலை கிடைத்தது.

ஈஸ்வரன் : 96 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட எவ்வளவு செலவானது ?

பதில் : ரூபாய் 1600 கோடி செலவானது.650 வீடுகள் உள்ளன .அது ஒரு சிறு நகரகமாவே உள்ளது.இரண்டாவது மாடியில் நீச்சல் குளம் உள்ளது.

சபரி : உலகின் மிகப்பெரிய கட்டிடம் துபாயில் உள்ளதா?

பதில் : 165 மாடி கொண்ட உலகின் பெரிய கட்டிடம் உள்ளது.அது அரசாங்கத்தால் கட்ட பட்டது.புஜ் காலிபன் என்ற பெயரில் சாப்பிங் மால் உள்ளது.

நதியா : துபாயில் ரூபாய் பெயர் என்ன ?

பதில் : திராம் என்பது ரூபாயின்  பெயர்.ஒரு திராம் சுமார் 20 ரூபாய் மதிப்பு உடையது.

சந்தியா : துபாயில் என்ன உணவு கிடைக்கும் ?

பதில் : இங்கே கிடைக்கக்கூடிய அனைத்து உணவுகளும் கிடைக்கும் 

மாதரசி : துபாயில் உங்களுக்கு பிடித்த இடம் எது ?

பதில் : மிராகல் கார்டன் என்கிற 70 லட்சம் மலர்கள் உள்ள இடம் உள்ளது.அது எனக்கு பிடிக்கும்.துபாயில் பாலைவன மணல்தான்.எதுவுமே விளையாது.இந்தியா,பாகிஸ்தான் இங்கிருந்து உரம்,மண்,தோட்டவேலை செய்பவர் என எல்லாமே பெற்றுக்கொண்டும்,வரவழைத்து கொண்டும் செய்கின்றனர்.

பாக்கியலட்சுமி : உங்களுக்கு எத்துணை மொழிகள் தெரியும்?

பதில் : எனக்கு 7 மொழிகள் தெரியும்.தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,குஜராத்,அரபி,ஆங்கிலம்,
மலையாளம் போன்ற மொழிகள் தெரியும்.தேவகோட்டையில் மட்டுமே வேலை பார்ப்பேன் என்பது அந்த காலம்.ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் படிப்புக்காகவும்,வெளிமாநிலங்களுக்கு செல்கிறோம்.எங்கு சென்றாலும் அதிக மொழி தெரிந்தால்தான் பலவிதத்தில் உதவியாக இருக்கும்.நீங்கள் முடிந்த வரை அதிகமான மொழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ராஜேஸ்வரி : உங்களுக்கு துபாயில் நெருங்கிய நண்பர் யார் ?

பதில் : துபாயில் எங்கள் நிறுவனத்தில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றுகின்றோம்.ஈரானை சேர்ந்த ஒருவர்தான் எனது நெருங்கிய நண்பர்.

ஜெயஸ்ரீ : 96 மாடி கட்டிடம் கட்டி முடித்த உடன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது ?

பதில் : உங்களுக்கு ஆண்டு தேர்வு முடிவு வெளிவரும்போது எப்படி இருக்கும் ? அது போன்றுதான் எனக்கு சந்தோசமாக இருந்தது.எத்தனையோ பொறியாளர்கள் இருக்க நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ந்தேன்.

மாதவன் : துபாயின் சிறப்பு அம்சங்கள் என்ன ?

பதில் ; மெட்ரோ ட்ரெயின் ,முழுவதும் தானாகவே இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன .துபாயில் மூன்றில் ஒரு பங்குதான் உள் நாட்டவர்.இரண்டு பங்கு வெளிநாட்டினார்கள் உள்ளனர்.அனைத்து நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர்.நான்கு நாட்கள் மற்ற உணவுகளை சாப்பிடலாம்.பிறகு நம் ஊர் உணவுதான் நமக்கு நல்லது.


கார்த்திகேயன் : நீங்கள் நிறைய நேரம் பயணம் செய்து உள்ளீர்கள்.அதில் ஏதவாவது ஒரு பயண அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ?

பதில் :  ஒரு நாள் விமான பயணத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே செல்லும்போது எனது அருகில் இருந்த அம்மா ஒருவருக்கு உணவு வழங்கினேன் .அவர்கள் ஏதோ அவசரத்தில் வந்து இருந்தார்கள்.உணவை மறந்து வந்திருந்தார்கள்.பசிக்க ஆரம்பித்த அவர்களது பார்வை தெரிந்தது .உடன் உணவை பகிர்ந்து கொண்டோம்.அன்பு,மனித நேயம் இரண்டையும் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நமது வாழ்க்கை பயணம் சிறக்கும்.தினசரி நாம் குளிப்பதுபோல்,சாப்பிடுவது போல் ,தூங்குவதுபோல் அன்பையும் இரட்டிப்பாக்கி எல்லோரிடமும் காட்ட வேண்டும்.உங்கள் தலைமை ஆசிரியரை எனக்கு தெரியாது.எனக்கு இந்த ஊர் இல்லை.சொந்த ஊரும் இல்லை.ஒன்றரை வருடமாக உங்கள் தலைமை ஆசிரியருடன் தொடர்பில் உள்ளேன்.நேருக்கு நேர் இன்றுதான் சந்திக்கிறோம்.உங்கள் பள்ளியின் செயல்பாடுகள்தான் 3000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள என்னை இங்கு வரவழைத்துள்ளது.


ஆசிரியை செல்வமீனாள் : உங்களது சாதனை என்றால் என்னவென்று சொல்வீர்கள்?

பதில் : நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறையை உள்ளது.எனது மனைவி மற்றும் குடும்பத்தார் உதவியால்தான் உங்கள் பள்ளியுடன் 40 அரசு பள்ளிகளை சென்று பார்த்துள்ளேன்.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் பார்க்க வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.அரசு பள்ளியில் உள்ள மாணவி ஒருவர் எனக்கு ஆறு ரூபாய் பரிசு கொடுத்ததை என்னால் மறக்க முடியாது.அதுவே எனது வாழ்நாளின் வெற்றியாக கருதுகிறேன்.உங்களால் முடியும் என்று நம்பி வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று பேசினார்.

இவ்வாறு மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.  

தொகுப்பு :
லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
 CELL :09786113160.
 



 



 

No comments:

Post a Comment