Sunday 17 February 2019

  அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் 
 ஒத்துழைப்பு பண்பு இருந்தால் வாழ்க்கை நம் வசப்படும் - மனிதவள பயிற்சியாளர் பேச்சு 

விட்டுக்கொடுத்தல்,கீழ்ப்படிதல்,ஏற்றுக்கொள்ளுதல் என்கிற மூன்று பண்புகள் இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பு எளிதாக நம்மிடம் அமையும் 









தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                  ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் வித்யா   அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் ஒத்துழைப்பு   தொடர்பாக விளையாட்டு முறையில் செயல்பாடுகள் செய்து மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் புரியும் வகையில் பயிற்சி அளித்தார் .மாணவர்கள் காயத்ரி,சபரி,நித்திய கல்யாணி,கீர்த்தியா ,சிரேகா ,காவியா,அய்யப்பன் ,கார்த்திகேயன் ஆகியோர் ஒத்துழைப்பு  தொடர்பாக தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த வித்யா  ஒத்துழைப்பு  என்கிற தலைப்பில்  வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment