Sunday 3 February 2019

ஆச்சிரியத்தை ஏற்படுத்திய ஆர் டி யு (RTU )
                               நண்பர்களே கடந்த வாரத்தில் நிகில் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலகுண்டு அடுத்து உள்ள கல்லுப்பட்டியில் ரீச்சிங்க்  தி  அன்ரீச்சிடு  என்கிற ஆசிரமத்துக்கு சென்றோம்.







புதுமைகள் நிறைந்த ஆசிரமம் :
                                                                 நாங்கள் பார்த்த ஆசிரமத்தில் உள்ள மாணவர்களின் தன்னம்பிக்கை அளவு அதிகமாக உள்ளதாக நாகலிங்கம் சார் அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஒரு அம்மாவிற்கு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பம் என்கிற விதத்தில் தனி,தனி வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுமார் 17 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அது என்ன ஒரு அம்மாவுக்கு ஆறு குழந்தைகள் ?
                                                     யாரேனும் ஆதரவற்ற அம்மாக்கள் தங்களது குழந்தைகளுடன் இந்த ஆசிரமத்திற்கு வந்தால் தனது குழந்தையுடன் இன்னும் ஆதரவற்ற ஆறு குழந்தைகளையும்   சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்து கொள்ள வேண்டும்.விருப்பம் இருந்தால் பார்த்து கொள்ளலாம்.விருப்பம் இல்லை எனில் குழந்தையை மட்டும் இங்கு விட்டு செல்லலாம்.ஆறு குழந்தையுடன் குடும்பமாக தனது குழந்தையும் சேர்த்து பார்த்து கொள்ளலாம்.அதற்கு மாதம் 3000 ரூபாய் பணம் கொடுத்து விடுகின்றனர்.ஒரு குழந்தைக்கு ரூபாய் 650 வீதம் ஒவ்வொரு மாதமும் பொறுப்பான அம்மாக்களிடம் கொடுத்து விடுகின்றனர்.அதனை அம்மாக்கள் பெற்று ,மொத்தமாக சமையல் பொருள்களை வாங்கி வந்து பிரித்து கொண்டு அதனை பயன்படுத்துகின்றனர்.ஒரு குடும்பமாக குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களின் தன்னம்பிக்கை அளவு அதிகரிக்கிறது.மேலும் பாசமும் நல்ல முறையில் ஏற்படுகிறது.

தனது குழந்தை வளர்ந்து விட்டால் தானும் குழந்தையுடன் சென்று விடலாம் :
                                தற்போது இங்கு உள்ள அம்மாக்கள் தனது குழந்தை வளர்ந்து விட்டால் ,திருமணமாகி விட்ட உடன் தனது குழந்தையுடன் இருக்க வேண்டும் என்றால் அவர்களுடன் சென்று இருக்கலாம்.இங்கேயே கட்டாயம் இருக்க வேண்டும் என்பது இல்லை.

இங்கு உள்ள விதிமுறைகள் :
                                                 ஆறாம் வகுப்பு வரை ஆண் குழந்தைகள் இந்த வீடுகளில் வாசிக்கலாம்.அதன் பிறகு அவர்கள் ஆண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.பெண் குழந்தைகள் திருமணம் முடியும் வரை வீடுகளில் இருந்து கல்லூரி படிப்பு வரை படிக்கலாம்.இங்கு உள்ள அம்மாக்கள் தினம் தோறும் மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை தனது உறவினர்களுடன் (திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் ) அலைபேசியில் பேசி கொள்ளலாம்.
                                  வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தொலைக்காட்சி பார்த்து கொள்ளலாம்.ஒவ்வொரு வீட்டிலும் ரேடியோ,பாட்டு உள்ள டி.வி.டி.வைத்து கொள்ளலாம்.நல்ல சூழ்நிலையில் குடும்ப பாங்காக பாதுகாப்பான வாழ்க்கை அமைந்து உள்ளதால் மாணவர்களின் நிலை நன்றாக உள்ளது.

உணவு முறைகள் :
                                              பெரும்பாலும் தினமும் காலையில் டிபன் உண்டு.வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டும் இரவில் டிபன் உண்டு.அந்த நாள்களில் காலையில் டிபன் இல்லாமல் சாதம் வழங்கப்படும்.மதியம் அவரவர் படிக்கும் பள்ளிகளில் உணவு சாப்பிட்டு கொள்ளலாம்.இங்கு இரண்டு முதல் ஐந்து  வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால்வடியும் செயல்படுகிறது.
                                         மாலை வேளையில் தினசரி 4.15 மணிக்கு அவரவர் வீடுகளில் சுண்டல்,கொண்டைக்கடலை என சத்தான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது.இது பாராட்டுதலுக்குரியது .
                                        ஞாயிற்று கிழமை அன்று குடும்பத்துக்கு என்ன பிடிக்குமோ அந்த அசைவ உணவை மொத்தமாக வாங்கி வந்து குடும்பம் வாரியாக பிரித்து சமைத்து சந்தோஷமாக சாப்பிடுகின்றனர்.

வாழ்வியல் சூழல் :
                                      மிகப்பெரிய மைதானத்துடன் பாதுகாப்பாக ஆசிரம வளாகம் அமைந்துள்ளது.மாலையில் நல்ல விளையாட்டு. தினமும் நல்ல முறையில் படிப்பு.இவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதற்கு மேலாளர்,அவருக்கு மேலே ஆசிரம பொறுப்பாளர்,இவர்களுக்கு அனைவருக்கும் மேலே பாதர் அவர்கள் தலைமையில் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
                   பூத்து குலுங்கும் மலர்களுடன் ,கோவில், மின்சாரம் தடைபட்டால் உடன் மின்சாரம் கிடைக்கும் வகையில் ஜென்செட் உள்ளது.

 

ஆசிரமம் குறித்து நாகலிங்கம் சார் என்ன சொல்கிறார்?
                                                                           சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆசிரமத்தின் பாதர் அவர்கள் நிகில் அறக்கட்டளையின் வழியாக இங்கு உள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க சொன்னார்.நாங்களும் மூன்று நாள் இங்கு வந்து பயிற்சி அளித்தோம் .மாணவர்களின் தன்னம்பிக்கை அளவு அதிகமாக இருந்தது.காரணம் இங்கு உள்ள மாணவர்கள் பாசத்துடன் வளர்க்கப்படுகிறார்கள்.
                                      இங்கு குறிப்பாக யாரையும் மதம் மாற்றவில்லை.அவரவர் மதத்தில் அவரவர் கடவுள் வழிபடலாம்.அவர்கள் படித்து முடித்து செல்லும் வரை எந்த வற்புறுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                
நிறுவனத்தை துவக்கியவர் :
                                                             ரீச்சிங்க்  தி  அன்ரீச்சிடு என்கிற நிறுவனத்தை துவக்கியவர் ஜேம்ஸ் எ கிம்ப்டன் என்கிற வெளிநாட்டினர் ஆவார் .பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தொழு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன் முதலில் இந்த நிறுவனத்தை துவக்கி உள்ளார்.பின்னர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும்,பிறகு அதனையே அனைவருக்குமான ஆசிரமமாகவும் துவக்கி உள்ளார்.இவர் நல்ல ஓவியர்.தண்ணீர் இருக்கும் இடத்தினை சொல்லும் ஆற்றல் உள்ளவர்.சுமார் 2,500க்கும் மேற்பட்ட போர் இருக்கும் இடங்களை சொல்லி உள்ளார்.சுமார் 5 குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று பல நூறு மாணவர்களை உருவாக்கி நிலைத்து நிற்கிறது.நிறுவனத்தின் துவக்கிய தலைவர் ஜேம்ஸ் ஏ கிம்ப்டன் கடந்த அக்டோபர் மாதம் இறந்துவிட்டார்.

சுமார் 10 வருடத்திற்கும் மேலாக குடும்பமாக இருந்து வரும் மேரி என்பவர் என்னிடம் சொன்னது :
                                            சார் நான் சுமார் 10 வருடத்திற்கு முன்பு இங்கு எனது சின்ன குழந்தையுடன் வந்தேன்.அப்போது பாதர் எனது குழந்தையை மடியில் தூக்கி வைத்து எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.நான் இங்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளேன்.சில குழந்தைகள் சில மாதங்கள் வெறுப்பாக இருப்பார்கள்.அவர்களை சரி செய்து ,பாசத்துடன் பார்த்து ,அன்பாக அரவணைத்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வருகிறோம்.எப்போதாவாவது எனது சொந்த ஊரின் எண்ணங்கள் வந்தால் ஊருக்கு சென்று வருவேன்.இங்கு நல்ல முறையில் பார்த்து கொள்கிறார்கள்.என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

வாழ்ந்து சென்று நல்ல முறையில் உள்ள மாணவர்கள் :
                                                                நாங்கள் பயிற்சி முடித்து வீட்டுக்கு கிளம்பும்போது படித்து முடித்து இன்று சென்னையில் IT துறையில் நல்ல வேளையில் இருக்கும் மாணவர்களை சந்தித்தோம்.மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.திருமணமாகி இப்போது உள்ள தலைவர் அந்தோணி  பாலுசாமி பாதர் அவர்களை சந்திக்க வந்து இருத்தனர் .

நன்றிகள் பல :

                                                 எங்களுக்கு இந்த நல்ல இடத்தை காண்பித்த நாகலிங்கம் சார் அவர்களுக்கும்,பாதர் பாலுசாமி அவர்களுக்கும்,பொறுப்பாளர் சண்முக லதா அவர்களுக்கும் நன்றிகள் பல.

அன்புடன் 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
 CELL :09786113160.

 
                                                   





                                                          

1 comment:

  1. Hello sir nanum anga than padichen ipo nalla workla nalla iruken Nan padikum pothu enakku entha koraium illa nalla jollyya enakku oru Amma illa anga irukura ellame Amma than en mela pasam katta neraya thangaikal enakku irukanga advice panna neraya Annankal kedachanga nalla Vali katta hostel wardens,mangers.apram nammala motivate panna Latha amma,palsamy father.school la anbana teachers kqndipana sirs.nalla food,nalla play grounds.athu matumma nammaku nam valakila epadi irukanumnu nerayave kathukoduthanga ipo ellame en valkaiku rompa rompa rompa usefulla irukku.thanks for r.t.u family,thank you James kimpton thaththa.

    ReplyDelete