Monday 4 February 2019

சாலை விதிகள் பத்து அதுவே வாழ்க்கைக்கான சொத்து 
போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சு 

சாலை பாதுகாப்பு வார விழா 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு   முகாம் நடைபெற்றது. ஆசிரியை செல்வமீனாள்  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் கீதா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் பேசினார்.சாலை விதிகளை அறிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும்.வாகனங்களை நிறுத்தும் இடங்களில் மட்டுமே வானங்களை நிறுத்த வேண்டும்.சைக்கிளில் செல்லும்போது கைகளை விட்டு,விட்டு வாகனம் ஓட்டக்கூடாது .விபத்து ஏற்பட்டால் 108க்கு போன் செய்ய வேண்டும்.வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பேசினார்.தேவகோட்டை போக்குவரத்துக்கு தலைமை காவலர் கலா,காவலர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக செயல்முறைகளை செய்து காண்பித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா மாணவர்களிடம் பாதுகாப்பான பயணம் தொடர்பாக விளக்கினார்.தேவகோட்டை போக்குவரத்து தலைமை காவலர் கலா,காவலர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு  செயல்முறைகளை செய்து காண்பித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .

No comments:

Post a Comment