Tuesday 29 November 2022

 சிறந்த கல்வி நிறுவனத்துக்கு பாராட்டு கேடயம் 






தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பான முறையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் பொதுமக்களிடம் சிறப்பான முறையில் குப்பை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கினார்.

                                           தேவகோட்டை நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குப்பை பிரித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.சிறப்பான முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு மாணவ தூதுவர்களை தயார்படுத்திய பள்ளியை பாராட்டி தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சாந்தி ஆகியோர் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்திடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள் . நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன்,ராஜாமணி,பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


பட விளக்கம் : தூய்மை இந்தியா திட்டத்தில் தேவகோட்டை நகராட்சியில் சிறப்பான முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு மாணவ தூதுவர்களை தயார்படுத்திய பள்ளியை பாராட்டி தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சாந்தி ஆகியோர் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்திடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment