Saturday 19 November 2022

 நடு ரோட்டில் 8 போட்டால் தண்டனை நிச்சயம் 

போலீஸ் எஸ் ஐ பேச்சு 

புதிய வாகன விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 





































தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

                   ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை போக்குவரத்து  காவல் சார்பு  ஆய்வாளர் கலா   மாணவர்களிடம் பேசுகையில்,  நீங்கள் சிறுவயது முதலே சாலை விதி முறைகளை தெரிந்து கொண்டு அதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.மனித உயிர் விலை மதிக்க முடியாதது.நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.சில வாலிபர்கள் நடுரோட்டில் எட்டு போட்டு வாகனம் ஓட்டுகிறார்கள்.அது போன்று வாகனம் ஓட்டுவது தவறு. அதற்கு தண்டனை கடுமையாக உண்டு.புதிய  வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இளம் வயதில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள் என்று பேசினார்.போக்குவரத்துக்கு ஏட்டு சுப்பிரமணியன்  மாணவர்களுக்கு பத்து வகையான முக்கிய சிக்னல் தொடர்பாக நேரடி செயல் விளக்கம் அளித்தார் . நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.



பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா  ,ஏட்டு சுப்பிரமணியன் ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில்  நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

வீடியோ : 
https://www.youtube.com/watch?v=8wospCYib-g

https://www.youtube.com/watch?v=oClTa-JkF3g





No comments:

Post a Comment