Thursday 3 November 2022

கந்த சஷ்டியில் கலை நிகழச்சிகளால் கலக்கிய பள்ளி 

 










































































































































































































































பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு 

 
 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.


                                       மாணவி  திவ்யஸ்ரீ   வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில்  நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,கருப்பையா ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர் ஆகியோருக்கும்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாணவி கனிஷ்கா நன்றி கூறினார். நிகழ்வில் பரத நாட்டியம்,  இயற்கை உணவை வலியுறுத்தி மழலைகளின் ஆங்கில நாடகம்  ,மழலைகளின் குழு நடனம், உழைப்பை வலியுறுத்தும் வாள் நடனம்  ,மொபைல் போன் விழிப்புணர்வு , கண்ணை கவரும் மழலைகளின் கண்ணன் பாட்டுக்கான குழு  நடனம்,1098, மொபைல் போன் போன்றவற்றுக்கான விழிப்புணர்வு , மனமும்,உடலும் பலமானதாக ,உறுதியானதாக இருக்க வேண்டி யோகா செய்து,விளக்கமும் கொடுத்த நிகழ்வு என அருமையாக ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள்  மாணவர்கள் பார்ப்பவர்களை அசர வைத்தனர்.
      

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் 
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் கந்தசஷ்டி விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.



 இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 10வது  ஆண்டாக தேவகோட்டை கந்த சஷ்டி விழா கலைநிகழ்ச்சிகளில்  பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=EvRynH_i7Zo

 

 https://www.youtube.com/watch?v=Ya-xF0DRuEk

 

 https://www.youtube.com/watch?v=iz4FySYWNWc

 

 https://www.youtube.com/watch?v=ohHV-HARKKY

 

No comments:

Post a Comment