Saturday 26 November 2022

 பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் வெற்றிக்கு 

பள்ளி மாணவர்கள் பாராட்டு





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள், 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. மேலும் அமெரிக்காவின் 4 செயற்கைக்கோள்கள் மற்றும் பூடானின் 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது..புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் ஈஓஎஸ்-6 போன்ற செயற்கைக்கோள்கள் கடலின் வெப்ப மாறுபாடு, கடற்பரப்பின் வேறுபாடுகளை அறிய உதவும்   என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு இணையம் வழியாக எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வீடியோ : 


https://www.youtube.com/watch?v=Ol1H5PS6BZ8







No comments:

Post a Comment