Wednesday 9 November 2022

 பொன்னுல கொஞ்சம்,மண்ணுல கொஞ்சம், பங்குல கொஞ்சம் என்கிற செட்டிநாட்டு பாடலை பின்பற்றுங்கள் 

மீச்சுவல் பண்ட் முதலீட்டார் விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல் 





           காரைக்குடி - நண்பர்களே சமீபத்தில் மீச்சுவல் பண்ட் முதலீட்டார் விழிப்புணர்வு கூட்டம் காரைக்குடியில் நடந்தது.அதனில் பேசிய சதீஷ்குமார் அவர்கள் பல்வேறு சுவாரசியமான , சிந்திக்க வேண்டிய தகவல்களை எடுத்துக்கூறி அனைவரையும் அசத்தினார்.

                    சேமிப்பு முதலீடு இரண்டிற்கும் முதலில் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள். சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமே. முதலீடு என்பது எவ்வளவு வரும் என்று தெரியாது .எனவே முதலீடு என்பதில் தான் நாம் லாபம் காண இயலும். 

                   சேமித்தால் பணவீக்கம் தாங்காது. முதலீடு செய்தால்  பணவீக்கம் நம்மை தாங்கும்.எனவே  பணவீக்கத்தை முறியடிக்க முதலீடு செய்யுங்கள். புரிந்த  வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நன்றாக செயல்படுகிறது. வியாபாரம் கடைகளில் எந்த  பொருள் நன்றாக விற்கிறது அவற்றில் முதலீடு செய்யுங்கள். புரிந்த வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்.

              என் பணம் முழுமையாக செயல்பட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். தேவைப்படாமல் மிச்சமாக இருக்கும் பணத்தை மீச்சுவல்  ஃபண்ட் திட்டங்களில்  முதலீடுகளில் செய்யுங்கள்.

                                மற்ற முதலீடுகளைப்போல் மீச்சுவல்  ஃபண்ட் முதலீடு சிறந்ததா?  அனைத்துமே பெட்டர் என்று தான் கூறமுடியும். எதுவுமே பெஸ்ட் என்று கூறமுடியாது. நிகர சொத்து மதிப்பு (நெட் ஆசெட் மதிப்பு ) என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள். (வளொட்டைலிட்டி)  சந்தை ஸ்திரத்தன்மை  என்பது ஏற்ற இறக்கங்களுடன் எப்பொழுதுமே இருக்கும். நமது வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். அதுபோன்றுதான் நமது முதலீடும் இருக்கம். 

                           செட்டிநாட்டு பாடல்களில்  அந்த காலத்தில் பாடிய பாடலில் மண்ணுல கொஞ்சம், பொண்ணுல  கொஞ்சம், பங்கிலா கொஞ்சம் அப்படின்னு பாடி இருக்காங்க . இந்த பாடலிலே பங்கு வணிகம் குறித்து அன்றே சொல்லி உள்ளனர்.

                   பங்கு சந்தையில் இரண்டு நண்பர்கள் - பவர் ஆஃ கம்பவுண்டிங், பங்குச் சந்தை முதலீடு . இரண்டு எதிரிகள் - பணவீக்கம், மற்றும் வரி.

                         ரியல் அசத்து என்பது ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றை வாங்குவதால் ஏற்படுகிறது. பினான்சியல் அசெட் என்பது ஸ்டாக்ஸ் , மீச்சுவல் பண்ட்  போன்றவற்றை வாங்குவதால் ஏற்படுகிறது. இப்பொழுது 60 ஆயிரம் ரூபாய் செலவு பணவீக்க விகித அடிப்படையில் 20 ஆண்டுகள் கழித்து 3 லட்சத்தி என்பது ஆயிரம் செலவு வரும்.

                                            இப்போது ஒருவர்  மாதம் 36,000 வீதம் பத்து   வருஷத்தில் முதலீடு செய்தால் 15 பர்சன்டேஜ் அடிப்படையில் பத்து வருஷத்தில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இப்போது இருபது  ஆயிரம் ரூபாய் செலவு என்று வைத்துக்கொண்டால் 20 ஆண்டுகள் கழித்து இரண்டு லட்சம் செலவாகும்.

                             நம்முடைய முதலீடு ஆனது சுற்றுலா செல்வதற்கும், குழந்தைகளின் கல்விக்கும், குழந்தைகளின் கல்யாணத்திற்கும், சந்தோசமான ஓய்வு காலத்திற்கும், இன்வெஸ்ட்மெண்ட் என்பது மிக முக்கியமானது. ரிஸ்க் ஆஃ லாங் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நீண்டகால முதலீடு மட்டுமே நமக்கு நன்மையைத் தரும். 


                          ரிட்டயர்மென்ட்ற்குப் பிறகு ஓய்வு காலத்திற்கு பிறகு swp  முறையில் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.  நிதித் திட்டமிடல் ஏன் செய்யவேண்டும் ?  குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் கல்யாணம், சந்தோசமான ஓய்வு காலத்திற்கு நிதி திட்டமிடல்.

                           பட்ஜெட் மற்றும் செலவு திட்டங்களை அவசியம் எழுதுங்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு 15 பைசாவிற்கு விற்ற காபி இன்று 15 ரூபாய், 40 ரூபாய், 50 ரூபாய் இன்னும் பெரிய ஹோட்டல்களில் குடித்தால் 750 ரூபாய்க்கு விற்கிறது. கடனை திறமையாக நிர்வகிக்க வேண்டும். 

                           அஸ்ஸட் அலோகேஷன்  மூலமாக பகிர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அவசர செலவுக்கு தேவையான நிதியை சேர்த்து விட்டு பிறகு செல்வம் சேர்ப்பதற்கான முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

                             பங்குகளை  வாங்கும் பொழுது முதலீட்டாளர் ஆகவே நாம் மாறிவிட வேண்டும். அப்பொழுதுதான் நீண்டகால முதலீட்டாளர்கள்  மட்டுமே 50 முதல் 100 சதவிகிதம் லாபம் அடைய முடியும். வர்த்தகம் நடக்கிறதா என்று பார்த்து புரிந்து பங்கு  வாங்க வேண்டும்.

                மீச்சுவல்  போட்டு வாங்கும் போது  கடைசி மூன்று வருடத்தில் சிறப்பாக செயல்பட்டு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சிறப்பாக செயல்படுகிறது என்றால் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்சமார்கை விட  சுமார்  3 சதவிகிதம், 5 சதவிகிதம் அதிகமாக  இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். 

                    மார்ச் 1979 இல் சென்செக்ஸ் நூறு பாயிண்ட் 2022 ல் சென்செக்ஸ் 49509 .     ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 100 ரூபாய் போட்டிருந்தால் 2022 ஆம் ஆண்டு 2840 ரூபாய் . அதேபோல் கோலடில்   100 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் அதனுடைய விலை இன்று 6286 ரூபாய்.

                    ஓய்வுகால திட்டமிடல் என்பது மிக அவசியம். சம்பளம் வாங்குபவர்களில் 93 சதவீதம் பேர் சமூகப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் இருக்கின்றனர். உங்களுடைய வருமானத்தை முதலீடு செய்து ஓய்வுகால திட்டமிடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

                    ஏனென்றால் ஓய்வு காலத்தில் நமக்கு பல்வேறு விதமான செலவுகள் ஏற்படும். அவற்றுக்கு சிறு வயது முதலே நீங்கள் முதலீடு  செய்ய வேண்டும். முதலீடு செய்து மீச்சல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முயற்சி எடுங்கள். இவ்வாறு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சதீஷ்குமார் அவர்கள் பேசினார்கள். 


                       நண்பர்களே தொடர்ந்து இதுபோன்று முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் நமது நிதித் திட்டமிடலை நாம் நன்றாக கவனித்துக் கொள்ளலாம். ஓய்வு காலத்திற்கும் நம்முடைய குறிக்கோள் களுக்கும் நிதி திட்டமிடல் அவசியமாகும். ஆயிரம் தானே இரண்டாயிரம் தானே என்று எண்ணாமல் கிடைக்கும் பணத்தை நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நிச்சயமாக நம்மால் நல்ல நிதி நிலைமையை பெறமுடியும். நல்ல நிதி நிலைமையை பெற்றால் நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். எனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுங்கள். நல்ல வாய்ப்பிற்கு நன்றி.

 எம் எஸ் லட்சுமணன்,

 காரைக்குடி.







No comments:

Post a Comment