Friday 4 November 2022

ஊழல் தடுப்பு  விழிப்புணர்வு வாரவிழா 

  பிறந்தாலும் லஞ்சம், இறந்தாலும்   லஞ்சம் 

லஞ்சம் கேட்டால் 8883434786 என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள்  

 லஞ்சத்துக்கு அடிப்படை நமது பயமே

விஜிலென்ஸ் டி .எஸ்.பி. விழிப்புணர்வு தகவல் 





 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு  வாரவிழா நடைபெற்றது.

 

                   ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டி.எஸ்.பி. ஜான் பிரிட்டோ  லஞ்சம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி பேசுகையில் , பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அதிக ஆசை படக்கூடாது.எங்களுக்கு புகார் வந்தால் லஞ்சம் கேட்பது உண்மை என்று தெரிந்தால் விசாரித்து நேரடியாக உண்மையை நிரூபிப்போம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம்,வாங்குவதும் குற்றம், நேர்மையை நிலைநாட்டுங்கள்.ஆசை அதிகமாவதே லஞ்சத்துக்கு காரணமாகும்.நமது பயம் ஒழிந்தால் லஞ்சம் ஒழியும்   என்று பேசினார்.சார்பு ஆய்வாளர் ராஜமுகமது மாணவர்களுக்கு புரியும் வகையில் எளியமையான முறையில் லஞ்சம் என்றால் என்ன? அது எங்கெல்லாம் அதிகமாக உள்ளது போன்ற தகவல்களை விளக்கினார்.மாணவர்கள்  பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.லஞ்சம் ,ஊழல் தொடர்பாக தகவல் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று சார்பு ஆய்வாளர்  கூறினார்.மொபைல் எண் : 9498190140 மற்றும் 04575-240222. நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.நிகழ்வில் விஜிலென்ஸ் பிரிவின் விஜயகுமார்,கண்ணன்  ஆகியோர் விழுப்புணர்வு உறுதிமொழி கூற மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு  விழிப்புணர்வு வாரவிழா மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி. ஜான் பிரிட்டோ மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர்  பதில் அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=0NFUQFftZi0


https://www.youtube.com/watch?v=CekpihJ6GgM

 

 

No comments:

Post a Comment