Thursday 1 December 2022

கப்பல் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு 

கல்வியே செல்வம் - கப்பல் துணை கேப்டன் பேச்சு 

 பஸ்ஸே போகாத கிராமத்தில் பிறந்து  உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கப்பல் துணை கேப்டன் பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

                                ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கப்பலில் துணை கேப்டனாக பணியாற்றும் தங்கமணி மாணவர்களிடம் கப்பல் வேலை வாய்ப்புகள் தொடர்பாக பேசும்போது, கப்பல் பயணம் தான் அனைத்து நாடுகளுக்கும் சரக்கு மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான எளிய வழிமுறை ஆகும்.  தரை மார்க்கத்தையும், வான் மார்க்கத்தையும் விட கப்பல் வழியாக செல்வது தான் மிகவும் எளிமையான ,மிகவும் குறைவான செலவிலான பயணமாகும்.தரை  மற்றும்  வான் மார்க்கமாக அழுகும் பொருள்களை மட்டுமே கொண்டு செல்வார்கள்.  சரக்கு கப்பல்களில் 500 டன் முதல் 5 லட்சம் டன் வரை கொண்டு செல்ல முடியும். பஸ்ஸே போகாத கிராமத்தில் பிறந்து உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது .அதுக்கு காரணம் கல்வி தான்.நன்றாக படித்தால் நாம் விரும்பும்  வேலை  நிச்சயம்.எனவே அனைவரும் என்ஜினீயர்,மருத்துவர் என்றே படிக்கின்றனர்.அதையும் தாண்டி கப்பல் படிப்பு போன்று பல்வேறு பணிகள் உள்ளது.கப்பல் படிப்பை நன்றாக படித்து சென்றால் மாதம் 15லட்சம் முதல் 25 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு பதிலளித்தார். எந்த குப்பையும் கடலில் தூக்கி எறிய மாட்டார்கள் என்றும் கூறினார். நாம் நிலத்தில் குப்பைகளை மிக எளிதாக வெளியே தூக்கி எரிகின்றோம். ஆனால் கடலில் அவ்வாறு யாரும் செய்வதில்லை. செய்யவும் கூடாது என்றும் தெரிவித்தார். ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


 பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கப்பல் துணை கேப்டன் தங்கமணி பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=IKOWmpgay6o


https://www.youtube.com/watch?v=kfn8xz8-UEI





No comments:

Post a Comment