Sunday 14 August 2022

 சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 


 சத்துணவு  சமையலர், அமைப்பாளருக்கு பரிசு வழங்கி பாராட்டிய பள்ளி 

 






 

 
 தேவகோட்டை – ஆக- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. சுவையான முறையில் மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறும் சமையலர் மற்றும் அமைப்பாளரின் பணியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

 

           ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை  தாங்கி கொடி ஏற்றி பேசினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார். 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தொடர்ந்து சுவையான முறையில் மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறும் சமையலர் தமிழரசி , அமைப்பாளர்  இந்திரா ஆகியோரின் பணியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும்,சுதந்திர தின விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
 

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் ,கடலாய் மிட்டாய் இனிப்பையும் வழங்கினார்.75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தொடர்ந்து சுவையான முறையில் மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறும் சமையலர் தமிழரசி ,அமைப்பாளர்  இந்திரா ஆகியோரின் பணியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=JJ_KTYMhS3M

 

 

 

No comments:

Post a Comment